தமிழக வெற்றிக்கழகத்தின் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியானது செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரியில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது

Continues below advertisement

தமிழக வெற்றிக் கழகம் ஆண்டு விழா:

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை, தொடங்கி ஓராண்டு முடிந்துவிட்டது. 2026 -ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தங்களின் இலக்கு என்று கூறி தவெக கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளை விஜய் வேகபப்டுத்தியுள்ளார். அதன்படி மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளை விஜய் நியமித்து வருகிறார். 

இந்நிலையில் தான், த.வெ.க இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று தொடங்கி நடைப்பெற்று வருகிறது . கட்சியின் முதல் மாநாட்டை போல பிரமாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகுந்த கட்டுப்பாடுகளுடன் இந்த நிகழ்ச்சியானது நடைப்பெற்று வருகிறது. 

Continues below advertisement

இதையும் படிங்க: களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?

பிரசாந்த் கிஷோர்:

தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா கூட்டத்தில் கட்சி தலைவர் விஜய் உடன், பொதுச்செயலாளர் என். அனந்த், தேர்தல் வியூக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா  ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர் மேலும், தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரும் கூட்டத்தில் பங்கேற்று உள்ளார். 

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் முதல் தமிழ் நாட்டில் நடக்கும் ஒரு அரசியல்  நிகழ்ச்சியில் முதல் முறையாக கல்ந்து கொள்வது இது முதல்முறையாகும். 

இதையும் படிங்க: TVK 1st Anniversary LIVE: தொடங்கியது தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா! முழு நேரலை..

விஜய் என்ன பேசப்போகிறார்?

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார்? என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்ப்பட்டுள்ளது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்காெடுமை குற்றங்கள், மத்திய அரசின் செயல்பாடுகள் மும்மொழி கொள்கை விவகாரம் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.