Vijay Makkal Iyakkam: மீண்டும் பனையூரில் ஆலோசிக்க இருக்கும் விஜய் மக்கள் இயக்கம்! - எப்போது?

விஜய் மக்கள் இயக்கத்தின் வழக்கறிஞர்கள் பிரிவு நிர்வாகிகளின் இந்த சந்திப்பு வரும் பனையூர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

Continues below advertisement

இதுவரை நிர்வாகிகளுடன் மட்டுமே நடந்த விஜய் மக்கள் இயக்க கூட்டம், முதன் முறையாக வழக்கறிஞர் பிரிவினருடன் ஆகஸ்ட் 5 அன்று நடக்கிறது

Continues below advertisement

விஜய் மக்கள் இயக்கத்தின் வழக்கறிஞர்கள் பிரிவு நிர்வாகிகள் சந்திப்பு வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 5) பனையூர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. ஓய்வுக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை இந்த ஆலோசனைக் கூட்டத்தை ஒருங்கிணைக்கும்படி விஜய் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

புஸ்ஸி ஆனந்த தலைமையில் ஆலோசனை

இதுவரை மாவட்ட நிர்வாகிகளுடன் மட்டுமே சந்திப்பு மற்றும் ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில், முதன் முறையாக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது. அந்த சந்திப்பில் சில முக்கிய விஷயங்களை விவாதிக்க விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இயக்கத்தை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்ல கூடிய தேவையான விஷயங்களையும், மற்றும் சட்டரீதியாக சந்திக்க நேரிடும் விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்க உள்ள இந்த ஆலோசனையில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நடிகர் விஜய் 234 தொகுதிகளிலும் 10ஆவது மற்றும் 12ஆவது பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த தமிழ்நாடு மாணவ மாணவியர்களை அழைத்து கல்வி உதவித் தொகை வழங்கினார்.

இந்த நிகழ்வில் காமராசர், அம்பேத்கர், பெரியார் ஆகியோரைப் படிக்க வேண்டும் எனக் கூறிய நிலையில், விஜய்யின் இந்தப் பேச்சு அவரது அரசியல் பயணத்துக்கு  அடித்தளம் போடும் வகையில் அமைந்து கவனமீர்த்தது.

இதனைத் தொடர்ந்து,  கடந்த ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி பயிலகங்கள் தொடங்கப்பட்டன. தற்போது வரை தமிழ்நாட்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 84 பயிலகங்கள் வரை  திறக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அடுத்ததாக புதுச்சேரியில் பயிலகங்கள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

லியோ

மற்றொருபுறம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இரண்டாம் முறையாக இணைந்துள்ள இப்படத்தில், த்ரிஷா, அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், கௌதம் மேனன் மன்சூர் அலி கான், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முன்னதாக இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், நடிகர் சஞ்சய் தத்தின்  முன்னோட்ட வீடியோ வெளியாகி இணையத்தில் லைக்ஸ் அள்ளியது. அடுத்ததாக வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அடுத்த அப்டேட் மற்றும் அவரது கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Continues below advertisement