தி.மு.க., அ.தி.மு.க.வில் 40 வருடங்களாக ஒரே நபர்களே மாவட்ட செயலாளர்களாக உள்ளனர். வி.சி.க.வில் மாவட்ட செயலாளர் பதவிக்கு 4140 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 2 சட்டமன்ற தொகுதிக்கு ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார் என, வி.சி.க. பொது கூட்டத்தில் திருமாவளவன் பேசினார்.

 

40 வருடங்களாக மாவட்ட செயலாளர்

 

செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுக்கூட்டம் மற்றும் மறைந்த கட்சியின் மூத்த பெண் நிர்வாகியின் படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தி.மு.க. அ.தி.மு.க.வில் ஒருவரே 40 வருடங்களாக மாவட்ட செயலாளர்களாக உள்ளனர். ஏன்? என அங்கு கேட்க முடியுமா? வீரபாண்டி ஆறுமுகம் கடைசி வரை மாவட்ட செயலாளராக இருந்தார். பொன்முடிக்கு இப்போது மாவட்ட செயலாளர் பதவி மாறியிருக்கிறது. நீண்ட காலம் அவர் மாவட்ட செயலாளராக இருந்துள்ளார்.

 

மாவட்ட செயலாளர் பதவிக்கு 4140 பேர்

 

தா.மோ.அன்பரசன் செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டும் மாவட்ட செயலாளராக உள்ளார். அ.தி.மு.க. தி.மு.க.வில் ஒரே நபரே தொடர்ந்து 30, 40 ஆண்டுகளாக ஒன்றிய செயலாளராக உள்ளனர். அங்கு எல்லாம் யாரும் பதவி கிடைக்கவில்லை என கட்சியை விட்டு போகவில்லை. அந்த தலைமையை ஏற்று கொண்டு அங்கு செயல்படுகிறார்கள். தலைமை இடும் பணிக்கு பணிந்து பணியாற்றுகிறார்கள். வி.சி.க.வில் மாவட்ட செயலாளர் பதவிக்கு 4140 பேர் விண்ணப்பித்து இருந்தனர். விண்ணப்பித்த 4140 பேரும் ஆளுக்கு ஒரு வரலாறு வைத்திருந்தார்கள். சிலருக்கு பதவி கிடைக்காமல் ஏமாற்றம் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது என மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காத வி.சி.க. நிர்வாகிகளுக்கு ஆறுதல் படுத்தி தி.மு.க. அ.தி.மு.க. தலைமையின் நிர்வாகிகள்; பதவி வகிப்பு குறித்து சுட்டிக்காட்டி திருமாவளவன் பேசினார். இக்கூட்டத்தில் வி.சி.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.