ஜேபி உள்நுழைய பார்க்கிறது
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே மாத்தூர் பகுதியில் கட்சி நிர்வாகி சம்பத் தாயார் லட்சுமி படத்திறப்பு விழாவில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர், மேடையில் பேசுகையில், ”அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும், அம்பேத்கர் வழியை பின்பற்ற அமைப்பாய் திரள்வோம் சேரிப் பகுதிகளில் பிஜேபி உள்நுழைய பார்க்கிறது. கொடியேற்ற அனுமதிக்காதீர்” என்றார்.
”அதிமுகவிற்கு ஆலோசனை சொல்வதற்கு நான் ஆலோசகர் இல்லை, ஆனால் அதிமுக முதுகில் பாஜக சவாரி செய்ய நினைக்கிறது. பாஜக தமிழகத்தில் வளர்ந்தால் அதிமுக நீர்த்து போய்விடும். திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர உள்ளதாக சிலர் நெருப்பு அள்ளி வீசுகிறார்கள்” என விடுதலை சிறுத்தை கட்சி திருமாவளவன் கட்சித் தொண்டர்கள் இடையே பேசினார்.
அடையாறில் செய்தியாளர் சந்திப்பு
தமிழக பாஜகவில் இருந்து ஐடி விங்க் தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் என்று கூண்டோடு வெளியேறி அதிமுகவில் இணைந்துள்ளனர். இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற அண்ணாமலை ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி தெரிவித்துவருகின்றனர். ஆனால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "பாஜகவை போல் அதிமுக தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்டால் பாஜகவால் ஈடுகட்ட முடியாது. பாஜகவினர் சிலர் விருப்பப்பட்டு இணைகிறார்கள். அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அண்ணாமலைக்கு தேவை" என அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் சென்னை அடையாறில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "பாரதிய ஜனதாவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொள்ள வேண்டும். அதிமுக தோளில் ஏறி சவாரி செய்து வெற்றிபெற முயற்சிக்கிறது பாஜக. அதிமுக இல்லாமல் பாஜக தனித்து நிற்காது, பாஜக இல்லாமல் வரும் தேர்தலை சந்தித்தால்தான் அதிமுகவுக்கும் நல்லது, தமிழ்நாட்டுக்கும் நல்லது. பாஜக கூட்டணியால் அதிமுகவுக்கு எந்த பயனும் இல்லை. பாஜகவுடனான கூட்டணி அதிமுகவுக்கு நல்லதல்ல. அதிமுகவை பாஜகவினர் தனித்து செயல்பட விடமாட்டார்கள். எனவே அதிமுக சுதந்திரமாக முடிவு செய்ய வேண்டும். அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், அதிமுகவுக்கு மட்டும் பாதிப்பில்லை, தமிழ்நாட்டிற்கே பாதிப்பு" எனக் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்