தமிழ்நாடு மக்களின் உரிமைக்கும் பங்கம் வருமே என்று சொன்னால் இந்திய பிரதமராக இருந்தாலும் அவர்களை தொட்டுப் பார்க்க அதிமுக தயங்கியதில்லை ஆகையால் வார்த்தைகளை கடுமையாக வெளிவிடாமல் கூட்டணி தர்மத்தை ஏற்றவாறு செயல்பட வேண்டுமென என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மாநில அதிமுக பாசறை செயலாளர் பேசினார்.

 

அதிமுகவில் அங்கம் வகித்தவர்கள் தான் இன்று தி.மு.க.,வில் 'டெப்டேஷன்' பார்கின்றனர். காஞ்சிபுரத்தில் நடந்த 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் மாநில இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் பேசினார்.

 



 

நலத்திட்ட உதவிகள் 

 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகே அதிமுக சார்பில் உலக மகளிர் தினத்தையெட்டி பொதுக்கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கூட்டத்திற்கு இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு விருந்தினராக மாநில இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் கலந்து கொண்டு பொது மக்களுக்கு ஏழை எளிய மக்களுக்கு சைக்கிள், தையல் இயந்திரம், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை, இளைஞர்களுக்கு விளையாட்டு பொருட்கள், ஏழை எளியவர்களுக்கு இலவச அரிசி போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர் பேசியபோது, 



அதிமுகவால் வளர்க்கப்பட்டவர்கள் - அங்கம் வகித்தவர்கள்தான் இன்று தி.மு.க.,வில் டெப்டேஷன் பார்க்கின்றனர், தற்போது பாஜக தமிழக சட்டமன்ற தலைவர் நயனார் நாகேந்திரன் அவர்களே அதிமுகவில் இருந்து வந்தவர்தான் அதனை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிந்து கொள்ள வேண்டும். இளைஞர்கள் அதிகளவில் அதிமுக கட்சியை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த 2 நாளாக பரபரப்பாக பேசப்படும் விவகாரமாக, தேசிய கட்சியில் இருந்து அதிமுகவில் இணைந்துள்ளனர்.

 

அதிமுகவை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்

 

தேசியக் கட்சியில் உள்கட்சி பிரச்சனையால் கட்சியினர் அதிமுகவை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள், இதை தேசிய கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை அதிமுக கட்சியினர் அனைவரும் அலை வீசி இருப்பது போல் கொந்தளித்து பேட்டி அளிக்கிறார், இதனை அதிமுக இளைஞர் பாசறை சார்பாக கண்டிக்கிறது.

 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்திக்கும்போது இது தொடர்பாக எதிர்வினையை விளைவிக்க இருக்கும் என நியூட்டன் லாவை தெரிவித்தார். ஆனால் அதிமுகவிற்கு நியூட்டன் லா வேறு, ஒரே ஒரு ஓட்டில் பிஜேபி பிரதமரை வீட்டுக்கு அனுப்பிய வரலாறு அதிமுகவிற்கு உண்டு. தமிழ்நாடு மக்களின் உரிமைக்கும் பங்கம் வருமே என்று சொன்னால் இந்திய பிரதமராக இருந்தாலும் அவர்களை தொட்டுப் பார்க்க அதிமுக தாங்கியதில்லை ஆகையால் வார்த்தைகளை கடுமையாக வெளியே விடாமல் கூட்டணி தர்மத்துக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டுமென பேசினார்