நீங்க, களத்திற்கு வாங்க விஜய் ; கருத்தியல் தலைவர்தான் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என புத்தக வெளியீட்டு விழாவில் விசிக துணை தலைவர் ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


”மன்னராட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும்”


அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது “  புத்தக வெளியீட்டு விழாவில் , அண்ணன் திருமாவளவன் இங்கு இல்லை; ஆனால், அவர் மனசாட்சி இங்குதான் இருக்கிறது; 2026 தேர்தலில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும்; பிறப்பால் இனி முதலமைச்சர் தமிழ்நாட்டில் உருவாகக் கூடாது. தமிழ்நாட்டில் நடைபெறும் மன்னராட்சியை கேள்வி கேட்டால் என்னை சங்கி என்கிறார்கள். 




”அதிகாரத்தில் பங்கு என ஏன் சொல்லக் கூடாது?”


ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என ஏன் சொல்லக் கூடாது ?; தமிழ்நாட்டில் தலித்தை ஒரு பொதுத் தொகுதியில் இன்று வரை நிறுத்த முடியவில்லை; இன்றைய நிகழ்ச்சி, எங்கள் பிரச்சாரத்தின் காரணமாக அமைச்சர்கள் அனைவரும் இன்று அம்பேத்கருக்கு மாலைக்கு அணிவித்து புகைப்படம் போட்டு வருகிறார்கள். தமிழக மக்கள் புதிய அரசியலை உருவாக்குவோம். 
 
கொள்கைகள் பேசும் கட்சிகள் ஏன் அம்பேத்கரை ஏன் மேடைகளில் ஏற்றவில்லை. தலித் மட்டுமே பேசிக்கொண்டிருந்த அம்பேத்கரை, தலித் அல்லாத விஜய் பேசுவதன் வாயிலாக, திருமாவளவனின் கனவு நிறைவேறியுள்ளது. 


”களத்திற்கு வாங்க விஜய்”




விஜய் வேங்கை வயலுக்கு செல்ல வேண்டும்; நீங்க, களத்திற்கு வாங்க விஜய்; கருத்தியல் தலைவர்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும். எல்லோரும் சமம் என்று சொல்வதுதான் 'திராவிடம்' என ஆதவ் அர்ஜீனா புத்தக வெளியீட்டு விழாவில் பேசினார்.