வன்னியர் சங்க நிர்வாகிகளை தேர்தெடுப்பதற்க்கான நிகழ்வு வன்னியர் சங்கம் சார்பில் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில் வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி,திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் பக்தவச்சலம் ஆகியோர் பங்கேற்றனர்.


இந்த நிகழ்வில் பேசிய வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி வன்னியர் சங்கம் தொடங்கி 42 ஆண்டுகள் ஆகின்றது. சமுதாய பிரச்சனைகளுக்கு தீர்வு காண எத்தனையோ போராட்டங்கள் நடத்தி உள்ளோம். ஆனால் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அரசு நம்மை ஏமாற்றி விட்டனர். நாம் பாதுகாக்கப்படுவோம் என்ற உத்தரவாதமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அடுத்தது பா.ம.க. ஆட்சி தான் காவல்துறையினர்கள் நம் மீது திட்டமிட்டு பொய் வழக்கு போடுகின்றனர்.




 


நமக்கு நியாயம் கிடைக்க மக்களை திரட்டி போராட வேண்டும். நாயுடு மங்கலத்தில் அக்னி குண்டத்தை மீண்டும் வைப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதிமொழி அளித்தார். ஆனால் இதுவரையில் வைக்கப்பட்ட வில்லை இதற்காக மீண்டும் மனு கொடுக்க மாட்டோம் மீண்டும் அதே இடத்தில் அக்னி குண்டத்தை நிறுவுவோம் என்றார், தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் வன்னியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்ற அடிப்படையில் தான் பாமக கட்சி தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுடன் என மாற்றி மாற்றி கூட்டணி அமைத்து வந்ததாகவும், ஆனால் தேர்தல் முடிந்தவுடன் அவர்கள் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை என்றும், கூட்டணி என்பது தேர்தல் வரை தான் என்றும் அதன் பின் அந்த கட்சிகளுக்கு நாம் அடிபணியக்கூடாது என்றார், இனிமேல் நாம் யாருடனும் கூட்டணி வைக்கபோவது இல்லை என்றும் வன்னியர்களின் வாக்குகள் தேவைபடுவோர் நம்மிடம் கூட்டணி வைக்கட்டும் என்று பேசினார்,




மேலும் தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்ப்பழிப்பு மற்றும் தீவிரவாதம் அதிகரித்து விட்டதாகவும், அதை பற்றி பேசாமல் தமிழகத்திற்கு வந்த மோடியுடன் சதுரங்க போட்டியை பற்றி தமிழக முதல்வர் பேசினார் என்றும், இட ஒதுக்கீட்டுக்காக போராட்டத்தை நடத்த பா.ம.க. விரும்பவில்லை என்றும், இந்தியாவில் கடந்த காலத்தில் மாநில பிரிப்புக்காக பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று உள்ளதாகவும், அந்த வகையில் வன்னியர்களுக்காக தனி மாநிலம் வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை என்றும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வன்னியர்கள் வாழ்வாதரத்திற்கு அரசுக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கூறுகிறோம். தி.மு.க. தலைவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை பெற்று தருவோம் என்று சொல்லி இருக்கின்றார் என்றும், அவரது தந்தை கருணாநிதியைப்போல் இவர் ஏமாற்றமாட்டார் என்றும், ஒரு வேளை இது நடைபெறவில்லை என்றால் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மிக பெரிய போராட்டம் நடைபெறும் என்றும் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி தெரிவித்தார்.