மே தினம் கொண்டாட்டம்

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மே தினத்தை முன்னிட்டு மதிமுக தொழிலாளர் முன்னணி கொடியினை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ ஏற்றினார். 

பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த வைகோ

சாதிவாரி கணக்கெடுப்பு 4 வருடங்களுக்கு முன்பாகவே எடுக்கப்பட வேண்டியது. தாமதமானாலும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்கப் போகிறோம் என மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எந்த பிழைக்கும் இடம் இல்லாமல் முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து அனைத்து கட்சிகளும் ஒத்துழைத்து சாதி வாரி கணக்கெடுப்பை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் எடுப்பதற்கு மத்திய அரசுக்கு வழி வகுக்க வேண்டும்.

இந்துத்துவா சக்திகளை எதிர்க்க கூட்டணி

திமுக கூட்டணி இந்துத்துவா சக்திகளை எதிர்ப்பதற்காகவும் , மனுதர்மம் சாஸ்திரத்தை நம்பிக் கொண்டிருக்கக் கூடிய வெற்றியாளர் கூட்டத்தை எதிர்ப்பதற்காக தான். இந்தியா ஒரே நாடு ,ஒரே மொழி , ஒரே மதம் ,  ஒரே தேர்தல் என்று ஆர்.எஸ்.எஸ் உடைய கோட்பாட்டை இந்தியாவின் மீது திணிப்பதற்கு துடித்துக் கொண்டிருக்கக் கூடிய இந்தத்துவா சக்திகளை எதிர்க்க முடிவெடுத்து தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட இயக்கத்தை காக்க வேண்டும் என திமுகவோடு கரம் கோர்க்கிறோம்.

பதவிக்கான கூட்டணி இல்லை

திமுக தலைமையிலான கூட்டணி கொள்கையின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட  கூட்டணி. ஆகவே பதவிக்காக கணக்குப் போட்டுக் கொண்டு உடன்பாடு காணவில்லை. எந்த சூழ்நிலையும் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக தொடர்ந்து ஈடுபடும் பாடுபடும். இந்துத்துவா சக்திகளை திருப்பி அடிக்க , அண்ணா கொடுத்த கொடியை காக்க மதிமுக முன்னின்று முழு மூச்சோடு பாடுபடும் என்றார்.