விமான நிலையம் வெளியே உள்ள அம்பேத்கர் சிலை முன்பு தவெக சார்பாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
தவெக தொண்டர் செயலால் பரபரப்பு
தவெக தலைவர் விஜய் கடந்த 26 மற்றும் 27 ஆம் தேதி கோவையில் பூம் கமிட்டி மாநட்டை நடத்தினார். அப்போது மாநாட்டிற்கு செல்வதற்கு முன்பு தனது வாகனத்தில் விஜய் பேரணி சென்ற போது தவெக தொண்டர் ஒருவர் மரத்தில் இருந்து குதித்து வேன் மீது ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. இது மட்டுமில்லாமல் விஜயை காண ஆர்வம் காட்டி வந்த சில பேர் விபத்தில் சிக்கிய சம்பவங்களும் அரங்கேறின, தவெக தொண்டர்கள் செயல் பலராலும் விமர்சிக்கப்பட்டது.
விஜய் வெளியிட்ட அறிக்கை
இந்நிலையில் இது குறித்து விஜய் தனது அறிக்கையில்..,” நம்ம அரசியல்ல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட கண்டிப்பும் self discipline-ம் 100% சமரசமற்றதாத்தான் இருக்கணும் ஃப்ரெண்ட்ஸ்… அதுதான் நம்ம அரசியலுக்கும் நல்லதுன்னு உங்களுக்கே தெரியும்... இனி அடுத்தடுத்து நம்ம மக்கள சந்திக்கிற நிகழ்ச்சிகளெல்லாம் இருக்கறதால நான் சொல்றத நீங்க இனிமே ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ செய்வீங்கன்னு நம்பறேன்… செய்வீங்க… செய்றீங்க… ஓகே?...” என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இன்று மாலை நாலு மணி அளவில் மதுரை விமான நிலையம் வர உள்ள நிலையில் காலை முதலே விமான நிலையத்தில் காத்திருக்கும் ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
மதுரை விமானநிலையத்திற்கு விஜய் வருகை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி பகுதியில் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் இன்று மதுரை வருவதாக தகவல் வந்ததை அடுத்து காலை முதலே மதுரை விமான நிலையத்தில் காத்திருக்கும் ரசிகர்கள். இன்று மாலை 4 மணி அளவில் தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து மதுரை வந்து இங்கிருந்து சாலை மார்க்கமாக திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடிக்கு செல்ல உள்ள நிலையில் அதிகாலை முதலே ரசிகர்கள் மதுரை விமான நிலையத்தில் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விமான நிலையத்திற்கு உள்ளே தொண்டர்களுக்கு அனுமதி இல்லை
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் இருந்து தவெகவினரை பாதுகாப்பாக போலீசார் வெளியேற்றினர். அதனால் விமான நிலைய சாலையில் இருபுறத்திலும் தொண்டர்கள் குவிய தொடங்கியுள்ளனர். மதுரை விமான நிலையத்திற்குள் பயணிகளை மட்டுமே சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது வருகின்றனர். மதுரையில் விமான நிலையம் வெளியே உள்ள அம்பேத்கர் சிலை முன்பு தவெக சார்பாக வரவேற்பு அளிக்க உள்ளனர். மதுரையை விமான நிலையத்திலிருந்து பரப்புரை வாகனம் மூலம் விமான நிலைய சாலையில் இருபுறமும் உள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை வாகனத்தில் இருந்தவாறு பார்த்துக் கொண்டே வரவேற்பு இடத்திற்கு செல்கிறார் விஜய்.