தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளியாகியது. இதில், தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றிய தி.மு.க., 133 நகராட்சிகளில் வெற்றி பெற்றது. பேரூராட்சிகளிலும் பெருவாரியான வெற்றியை பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக, அ.தி.மு.க.வின் கோட்டையாக கருதப்பட்ட கோவையிலும் மோசமான தோல்வியை அ.தி.மு.க. சந்தித்துள்ளது.


அ.தி.மு.க.வின் தலைவர்களான எடப்பாடியிலும், பெரியகுளத்திலுமே தி.மு.க.வே வெற்றிக் கொடியை நாட்டியுள்ளது. இதனால், அ.தி.மு.க.தொண்டர்கள் கடும் அதிருப்தியிலும், ஏமாற்றத்திலும் உள்ளனர். அ.தி.மு.க.வின் இந்த தோல்வி கட்சித் தலைமை வரை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.விற்கு மாற்று சக்தி அ.தி.மு.க.தான் என்று இத்தனை ஆண்டுகளாக நிலவி வந்த மனப்பாங்கையே இந்த தோல்வி மாற்றிவிடுமோ என்று அ.தி.மு.க. நிர்வாகிகளும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.




இந்த நிலையில், அ.தி.மு.க.வின் ஆலோசகர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிலர் அ.தி.மு.க.விற்குள் மீண்டும் சசிகலாவை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கியுள்ளனர். அ.தி.மு.க.வை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவதால் அ.தி.மு.க. தென்தமிழகத்தின் கோட்டையாக விளங்குவதற்கு காரணமாக இருக்கும் முக்குலத்தோரின் வாக்குகளை மீண்டும் பெறலாம் என்றும், மகளிர்கள் மத்தியில் அ.தி.மு.க. இழந்த செல்வாக்கை மீண்டும் பெறலாம் என்றும் நம்புகின்றனர்.


இதுதொடர்பாக, அ.தி.மு.க.வின் தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடமும், மூத்த தலைவர்களான செங்கோட்டையன், கே.பி.முனுசாமி மற்றும் கொங்கு மண்டல அ.தி.மு.க. தலைவர்களிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியள்ளது.




சசிகலாவிற்கு கட்சியில் ஒரு முக்கியமான பதவியை அளித்து அவரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவதன் மூலமாக இழந்த செல்வாக்கை மீண்டும் பெறலாம் என்றும், இந்த செல்வாக்கு மூலமாக நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெறலாம் என்றும் நம்புகின்றனர். இதுமட்டுமின்றி, இந்த தேர்தலில் பல இடங்களில் அ.ம.மு.க.வினர் வெற்றி பெற்றுள்ளனர். அ.ம.மு.க.வின் வாக்குகள் அனைத்தும் அ.தி.மு.க.வின் வாக்குகள் என்பதால், சசிகலா மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தால் அந்த வாக்குகளும் அ.ம.மு.க.விற்கு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.


இந்த உள்ளாட்சித் தேர்தல் தோல்வி அ.தி.மு.க.வின் தலைமை மீது கட்சியின் நிர்வாகிகளுக்கும், கட்சியின் தொண்டர்களுக்கும் இடையே அதிருதிப்தியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


Aniruth Arabic Kuthu Dance: விஜய்க்கே டஃப் கொடுப்பாரு போல இருக்கே.. இது அனிருத் அரபிக்குத்து.. வைரலாகும் வீடியோ..!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண