பொங்கலுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

கொரோனா காலத்தில் இருந்து மீண்டு வந்த மக்களுக்கு மு.க.ஸ்டாலின் ரூ.5000 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்- பழனிசாமி

Continues below advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குட்பட்ட விருத்தாச்சலம் மெயின் ரோட்டில் நரிக்குறவர் சமுதாய மக்கள் தங்குவதற்கு வீடு இல்லாமல் தவித்து வந்தனர். இதனை அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறப்பினர் குமரகுரு தனது சொந்த செலவில் நரிக்குறவ மக்களுக்கு வீடு கட்டி முடித்துள்ளார். இந்த 20 வீடுகளை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி திறந்து வைத்து பேசினார்.

Continues below advertisement

விழாவில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசியதாவது:-

2023ம் ஆண்டின் சிறப்பான தொடக்கமாக இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன். அ.தி.மு.க சார்பில் சிறப்பான வீடுகளை கட்டிக் கொடுத்த மாவட்ட செயலாளர் குமரகுருவை நான் பாராட்டுகிறேன். அனைவருக்கும் வீடு வேண்டும். உடுத்த உடை வேணும். சாப்பிட உணவு வேண்டும். இந்த மூன்றையும் வழங்கியவர் எம்.ஜி.ஆர். அதற்குப் பிறகு ஜெயலலிதா தொடர்ந்து பணியாற்றினார். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறோம். 20 நரிக்குறவர்களின் குடும்பங்களில் நாம் சிரிப்பை காண்கிறோம். இதுதான் அ.தி.மு.க.. இந்தியாவிலேயே உயர் கல்வி படிப்பதில் முதலிடம் தமிழ்நாடு. இதை உருவாக்கி காட்டியது அதிமுக. அரசு பொங்கல் தொகுப்பு என்கிற பெயரில் தொகுப்பு பொருட்களை தற்போது அறிவித்தார்கள்.

ஆனால் அதில் கரும்பை தவிர்த்து விட்டார்கள். கரும்பு தான் நமது பாரம்பரிய பழக்கம். ஆனால் கரும்பை கூட வழங்காமல் நிராகரித்து விட்டார்கள். ஒட்டு மொத்த விவசாயிகளின் கோரிக்கையை அ.தி.மு.க. ஏற்று போராட்டத்தினை அறிவித்தது. அதன்பின்னர்தான் தற்போது கரும்பையும் பொங்கல் தொகுப்பில் சேர்த்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் பொங்கல் தொகுப்பு என்கிற திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 2500 அதிமுக ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்டது. அப்போது மு.க.ஸ்டாலின் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என அறிக்கை கொடுத்தார். ஆனால் தற்போது 1,000 ரூபாய் தான் வழங்குகிறார். கொரோனா காலத்தில் இருந்து மீண்டு வந்த மக்களுக்கு மு.க.ஸ்டாலின் ரூ.5000 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். என்றென்றும் ஏழை மக்களுக்கு அ.தி.மு.க. உறுதுணையாக இருக்கும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

 


என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

Continues below advertisement