உதயநிதி ரியாக்ட்:
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் தேர்வாக போகிறார் என்ற தகவல் வருவதாக நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு , அரசியல் கேள்வி கேட்காதீங்க என்ற சொல்லியிருக்கேன் என ரஜினிகாந்த் கிளம்பினார். இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்கையில், நடிகர் ரஜினியிடம் இந்த கேள்வி கேட்பது எனக்கே அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.
துணை முதல்வர்:
கடந்த சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார். உடனே அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படாமலே இருந்தது.
அவருக்கு அமைச்சரவையில் எப்போது இடம் வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து, கடந்த ஓராண்டுக்கு முன்பு அவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டு, விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டது.
விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு முதலமைச்சர் விளையாட்டுக் கோப்பை உள்ளிட்ட பல திட்டங்களை அவர் செயல்படுத்தி வருகிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் உதயநிதி துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதுகுறித்துக் கட்சியின் மூத்த தலைவர்களும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
இன்னும் ஓரிரு நாட்களிலோ அல்லது 10 நாட்களுக்குள்ளோ துணை முதலமைச்சராக உதயநிதியை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
கேள்வி அதிர்ச்சியளிக்கிறது.!
இந்த தருணத்தில் , நடிகர் ரஜினிகாந்திடம் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்க போவதாக தகவல் வருகிறதே என கேள்வி எழுப்பினர். அதற்கு , ரஜினிகாந்த் “அரசியல் கேள்வி கேட்காதீங்க என்ற சொல்லியிருக்கேன் என அவ்விடத்தைவிட்டு கிளம்பினார்.
பின்னர், இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்கையில் “ உதயநிதி முதலமைச்சராகுகிறாரா என்ற எல்லாரிடமும் கேள்வி கேட்கப்படுகிறது. இது குறித்து முதலமைச்சரிடம் கேட்கலாம், என்னிடம் கேட்கலாம், ஆனால் ரஜினி அவர் பாவம், படப்பிடிப்புக்காக விமான நிலையம் செல்கிறார், அவரிடம் துணை முதல்வர் பதவி குறித்து கேட்பது அதிர்ச்சியளிக்கிறது, என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.