சட்டசபையில் முதலமைச்சர் விஜய் பேச்சு
தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதம் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற நிலையில், நேற்று ஆளுநர் உரை மீது எதிர்கட்சி தலைவர்கள் உரையாற்றினார். இதனையடுத்து இன்று காலை முதலமைச்சர் விஜய் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில அளிக்கும் வகையில் தனது பதிலுரையை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், மக்களுக்காக கடந்த பல ஆண்டுகளாக செயல்படுத்திய திட்டங்களை பட்டியிலிட்டார் ஊழலுக்கு எதிராக சட்டமன்றத்தில் தான் பேசியதையும் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த 40 நாட்களில் தவெக அரசு செயல்படுத்திய திட்டங்களையும் பட்டியலிட்டார்.
கட்சி நிதி என்ற பெயரில் கொள்ளை
தொடர்ந்து பேசிய அவர், நமது அமைச்சர்களுக்கும், நமது சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒன்றும் தெரியாது என சிலர் விமர்சிக்கின்றனர். ஆமாங்க, எங்களுக்கு தெரியாது தான். எங்களுக்கு மக்கள் பணி செய்ய தெரிந்த அளவிற்கு, மக்கள் பணத்தை சுருட்ட தெரியாது என கூறினார். பணியிடங்களை உருவாக்க தெரியுமே தவிர, அவற்றை பணத்திற்கு விற்க தெரியாது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், “டாஸ்மாக் போல பல துறைகளிலும் கட்சி நிதி என்ற பெயரில் அடித்த கொள்ளையை தமிழக அரசு கருவூலத்திற்கு வந்துள்ளது என கூறினார்.
திமுகவினர் அமளி
இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலமைச்சர் பேச்சுக்கு பதில் அளித்த பாயிண்ட் ஆப் ஆர்டர் விதி மூலம் பதில் அளிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என கேட்டனர். ஆனால் சபாநாயகர் இதற்கு மறுப்பு தெரிவித்தார். முதலமைச்சர் பேசி முடிந்ததும் கடைசியில் பேச வாய்ப்பு தருவதாக கூறினார். ஆனால் முதலமைச்சர் பேச்சு தவறாக உள்ளது என கூறி திமுகவினர் தொடர்ந்து கூச்சல் எழுப்பி வந்தனர். இதனையடுத்து பேசிய உதயநிதி, நேற்று நான் பேசும்போது அமைச்சர்கள் குறுக்கிட்டு பேசினார்கள். அப்போது நீங்கள் அனுமதி கொடுத்தீர்கள். இன்று முதலமைச்சர் தவறான தகவலை தெரிவிக்கிறார்.பார்ட்டி பண்ட் சொல்லுகிறார்.
தைரியம் இருந்தா சொல்லுங்க..
எந்த பார்ட்டி என சொல்லுங்க, அதை தைரியம் இருந்தா சொலுங்க எதிர் கொள்ள தயார். ஆதாரத்தோடு பேசுங்கள் என தெரிவித்தார். நேற்று நான் பேசி முடிந்ததும் அவை முடிந்ததாக அறிவித்தீர்கள். நாங்களும் வீட்டிற்கு சென்று விட்டோம். வீட்டிற்கு சென்று டிவி பார்த்த போது அமைச்சர் இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறார். நீங்கள் பேசிக்கொண்டே இருப்பீங்களா.? நாங்கள் அதனை பார்த்துக்கொண்டே இருக்கனுமா.? முதலமைச்சர் பேசும்போது நாங்களும் அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தோம். சில கருத்துகளை பேசும்போது அதனை அனுமதிக்க முடியாது. ஆதாரத்தோடு பேசினால் நிரூபிக்க தயார் என உதயநிதி தெரிவித்தார்.
