- ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலுரையை தொடங்கினார்
- எதிர்த்து பேசினால் மட்டுமே எதிர்க்கட்சி என சிலர் செயல்படுகின்றனர் என திமுகவை முதலமைச்சர் விஜய் மறைமுகமாக சாடினார்
- திருவள்ளூர் தொழிற்சாலையில் அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட விவகாரம் தொடர்பான இடைக்கால அறிக்கையை முதலமைச்சர் விஜயிடம் இன்று அளிக்கிறது 3 நபர் குழு - இந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்
- காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 52வது கூட்டம் டெல்லியில் இன்று பிற்பகல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் இதில் பங்கேற்க உள்ளனர்
- சென்னை, திருச்சி, கோவை, மதுரை மாவட்டங்களில் 18 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை; ஆசிரியர் தேர்வில் மோசடி தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
- கத்தார் எரிவாயு ஆலை விபத்தில் உயிரிழந்த 13 பேரில் 12 பேர் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள்; நெல்லை ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த பவித், பணகுடியைச் சேர்ந்த சுஜித்குமார், கவின் மரணம்
- முழு பயிர்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் போராடிவரும் நிலையில் - புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் பெரும் அதிர்ச்சி
- தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு - இந்த விபத்தில் ஹரிகைலாஷ், கீர்த்தி, வேலுச்சாமி (51) நிகழ்விடத்திலேயே பலி. காரில் பயணித்த முனியாண்டி, வசந்த் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதி
- எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோருக்கு இடைத்தேர்தலில் சீட் வழங்க தவெக தலைமை தயக்கம்
