எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த யாரெல்லாம் விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்?; ஆதரவு தெரிவித்துள்ளனர் என பார்ப்போம்.!


விஜய் பேச்சு:


தவெக தலைவர் பேசியதாவது, “ மக்களின் அடிப்படைப் பாதுகாப்பான சமூக நீதியைக் கொடுக்காமல், கூட்டணிக் கணக்குகளை மட்டுமே மனதில்வைத்து, இருமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாளத்தோடு முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்கள் சார்பாக நான் விடுக்கும் எச்சரிக்கை.


நீங்கள் உங்கள் சுயநலத்திற்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் அத்தனையும் 2026இல் மக்களால் மைனஸ் செய்யப்படும்" என்றார்.


விசிக தலைவர் திருமாவளவனுக்கு அழுத்தம் தரப்பட்டது. எனவே, அவர் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அவரின் மனது இங்குதான் இருக்கிறது" எனவும் தெரிவித்தார்.


உதயநிதி ஸ்டாலின்: 


இந்த நிகழ்ச்சி குறித்து பேசுகையில், சினிமா நிகழ்வை பார்ப்பதில்லை என துணை முதலமைச்சர் ஸ்டாலின் உதநியதி தெரிவித்துள்ளார்.


மேலும்”தமிழ்நாட்டில் மக்கள் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் மக்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த அறிவு கூடவா இல்லை அந்த ஆளுக்கு” என உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டது,  ஆதவ் அர்ஜூனாவை குறிப்பிடுவதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


கனிமொழி:


திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி பேசியதாவது , “ தேர்தல் நெருங்கி வருகிறது; வாட்ஸ் ஆப்பில் பொய் செய்திகளைப் பரப்பி வருகின்றனர். பல மாநிலங்களில் மக்களைப் பிரித்துத் தான் குழப்பங்களை உருவாக்கி சிலர் வெற்றிகளைப் பெற்று இருக்கிறார்கள். இங்கேயும் நம்மைப் பிரிக்க சிலர் குழப்பம் செய்கிறார்கள். 


நம்முடைய சாதனைகளை இளைஞர்களுக்கு சொல்ல வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஆட்சி தான் திமுக ஆட்சி. மக்களிடம் தெளிவாக இதை சொல்ல வேண்டும். தெருமுனை பிரச்சாரம், தெரு முனை கூட்டங்கள் நடத்தி திமுக ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்ல வேண்டும். இதை செய்தாலே நம்மை தாண்டி தமிழகத்தில் யாரும் வெற்றி பெற முடியாது. 
வரும் 2026 தேர்தல் வெற்றி என்பது மக்களாகிய உங்களுடைய கரங்களில் தான் இருக்கிறது. எனவே, கட்டுப்பாடோடு பணியாற்றினால் வெற்றி நிச்சயம்; அண்ணன் தளபதி சொன்னது போல 200 தொகுதிகளிலும் நிச்சயமாக வெற்றி பெறுவோம். நானும் இறுமாப்போடு சொல்கிறேன் வெற்றி நிச்சயம்”  என கனிமொழி பேசினார். 


திருமாவளவன்


விழாவில் பங்கேற்ற இயலாமல் போனதற்கு எந்த அழுத்தமும் காரணமில்லை. சுதந்திரமாக நான் எடுத்த முடிவு. நான் கலந்து கொண்டிருந்தால் இதை வைத்து அரசியல் செய்யும் சிலர் இதை திசை திருப்புவதற்கும் திரிபுவாதம் செய்வதற்கும் வாய்ப்புள்ளது. பணிந்து, முடிவெடுக்க இயலாமல் தேங்கி நிற்கிற நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை என தெரிவித்தார்.


ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்திற்கு எனக்கு உடன்பாடு இல்லை. அந்தக் கருத்தை நானும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மறுக்கிறது. ஆதவ் அர்ஜுனாவிடம் உயர்நிலைக் குழுவின் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.வேங்கைவையில் குறித்து பேசும் விஜய் எந்த ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. எதிர்க்கட்சிகள் எங்கே போராட்டம் நடத்தி இருக்கிறார்கள் அவர்கள் ஏன் போராட்டம் நடத்தவில்லை என யாரும் கேள்வி கேட்கவில்லை திருமாவளவன் ஏன் போராட்டம் நடத்தவில்லை என்று கேள்வி கேட்கிறார்கள். 


மணிப்பூர் விவகாரத்தில் போராட்டம் நடத்தி இருக்கிறோம். இந்திய ஒன்றிய அரசு மணிப்பூர் விவகாரத்தில் எவ்வளவு மெத்தனமாக இருந்தது என்று தெரியும். திமுக அரசை குறை கூற வேண்டும், அதை மட்டும் கூறினால் சரியாக இருக்காது என தெரிந்து அவ்வப்பொழுது பிஜேபியும் தொட்டு காட்டுகிறார்கள் சிலர்‌ என மறைமுகமாக விஜய்யை விமர்சித்துள்ளார் என தெரிவித்தார். 



இயக்குநர் அமீர் 


ஆதவ் அர்ஜூனாவின் கருத்துக்கு,  இயக்குநர் அமீர் கருத்து வெளியிட்டதாவது”, ”பிறப்பால் ஒருவார் பணக்காரர் ஆகலாம். பணக்கார வாரிசுகளை மணப்பதாலும், பணக்காரர் ஆகலாம். ஜனநாயக நாட்டில் மக்கள் ஆதரவு இல்லாமல் ஒருவர் முதல்வராகவே முடியாது என தெரிவித்திருக்கிறார். 


மேலும், சில அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களின் சுருக்கத்தை பார்ப்போம்.


திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி 





 


திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ்.பாரதி:


 




தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை:




அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி:



 


அமமுக தலைவர் டிடிவி தினகரன்: