TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!

TVK Vijay: தவெக சார்பில் நடத்தப்படும் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் நேரில் பங்கேற்று பேச உள்ளார்.

Continues below advertisement

TVK Vijay: தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். இவர் கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கினர். அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நடிகர் விஜய் தனது அரசியல் நகர்வுகளை கடந்தாண்டு இறுதி முதல் தீவிரமாக நகர்த்தி வருகிறார். 

Continues below advertisement

இஃப்தார் நிகழ்ச்சியில் நடிகர் விஜய்:

குறிப்பாக, தனது அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்து வருகிறார். தவெக அரசியல் மாநாடு, பரந்தூர் மக்களுடன் சந்திப்பு, தவெக 2ம் ஆண்டு தொடக்க விழா ஆகியவற்றில் விஜய் பேசியது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த சூழலில், தவெக சார்பில் நடத்தப்படும் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்கிறார். சென்னையின் ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் இந்த நிகழ்ச்சி வரும் 7ம் தேதி நடக்கிறது. தவெக சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் இஃப்தார் நோன்பு திறக்கும் விழாவைத் தொடங்கி நடிகர் விஜய் பேச உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

உற்று நோக்கும் அரசியல் கட்சிகள்:

அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய்யின் ஒவ்வொரு நகர்வும் மக்கள் மத்தியிலும், மற்ற அரசியல் கட்சியினர் மத்தியிலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் விரைவில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் நடிகர் விஜய். அதற்காக அவர் தீவிர பணியாற்றி வருகிறார். 

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களையும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய விஜய்யும் உத்தரவிட்டுள்ளார். இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பா.ஜ.க. அரசு இஸ்லாமியர்கள் தொடர்பாக கொண்டு வந்த சட்டங்கள் குறித்தும், திமுக அரசு அதில் எடுத்திருக்கும் நிலைப்பாடு குறித்தும் கருத்து தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

திமுக-விற்கு எதிரான வியூகம்:

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக-வை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ள விஜய், திமுக-விற்கு எதிராக வியூகங்களை வகுத்து வருவதுடன் கூட்டணிக்கான அச்சாரத்தையும் அடித்தளமிட்டு வருகிறார். விசிக -விற்கு நடிகர் விஜய்யே நேரடியாக அழைப்பு விடுத்தார். மேலும், திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினரையும் தன்பக்கம் இழுக்க நடிகர் விஜய் திட்டமிட்டு வருகிறார். 

நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், விஜய் முழு மூச்சில் அரசியல் களத்தில் இனி பயணிக்க உள்ளார். அவரது சுற்றுப்பயண அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விஜய்யின் கட்சிக்கு சமீபத்தில் இணைந்த ஆதவ் அர்ஜுனா முக்கிய பலமாக விளங்கி வரும் நிலையில், இந்தியாவின் பிரபல தேர்தல் வியூக பிரபலம் பிரசாந்த் கிஷோர் வரும் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை வெற்றி பெற வைப்பேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement