TVK District Secretaries 6th List Released: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஏற்கனவே 5 கட்டங்களாக 95 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 19 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட 19 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் உட்பட மொத்த 114 மாவட்டங்களுக்கான நிர்வாகிகளின் பெயர் விவரங்களை தெரிந்து கொள்வோம்.  

தவெகவின் 120 மாவட்டங்கள்

தமிழ்நாட்டில் ,  தமிழக வெற்றிக் கழகம் கட்சியை வலுப்படுத்தும் வகையில், கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் விஜய் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளார். 

இந்நிலையில், அதன் முதல் பணியாக தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், அதை 120 மாவட்டங்களாக பிரித்து, தவெக நிர்வாகிகளை நியமனம் செய்யும் முடிவை விஜய் எடுத்துள்ளார்.

Also Read: திமுகவை வெளுக்கும் விஜய்.! வாய்வித்தையில் மட்டும் ஆடுது திமுக..திருமாவளவனை டேக் செய்த தவெக.!

Also Read:தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதவி: 19 பேருக்கு பொறுப்புகளை வழங்கிய விஜய்

114 மாவட்டங்கள் நிர்வாகிகள்

இந்நிலையில்,  ஏற்கனவே 5 கட்டங்களாக 95 மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 19 மாவட்ட நிர்வாகிகள் நியமனம்  செய்யப்பட்டுள்ளனர். இன்று கட்சி நிர்வாகிகளை நேர்காணல் செய்து, கட்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்து, நிர்வாகிகளை நியமனம் செய்தார், விஜய். 

இக்கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகளுடன், தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, 19 மாவட்டங்களுக்கான புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, விஜய் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.எக்ஸ் பக்கத்தில், அவர் தெரிவித்திருப்பதாவது” 

6 வது பட்டியல்

இந்நிலையில்,  ஏற்கனவே 5 கட்டங்களாக 95 மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 19 மாவட்ட நிர்வாகிகள் நியமனம்  செய்யப்பட்டுள்ளனர். இன்று கட்சி நிர்வாகிகளை நேர்காணல் செய்து, கட்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்து, நிர்வாகிகளை நியமனம் செய்தார், விஜய். 

இக்கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகளுடன், தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, 19 மாவட்டங்களுக்கான புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, விஜய் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.எக்ஸ் பக்கத்தில், அவர் தெரிவித்திருப்பதாவது”  தமிழக வெற்றிக் கழகத்தில் ஆறாம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விஜய் வாழ்த்து:

புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

இதுவரை, 6 கட்டங்களாக 114 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நியமனம் செய்யபட்டுள்ள நிலையில், பெயர் விவரங்களை தெரிந்து கொள்ள, கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். தவெக மாவட்ட நிர்வாகிகள் பட்டியல்