கருத்து கந்தசாமி போல டிடிவி தினகரன் தனது இருப்பை காட்டி கொள்ள எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து கூறியுள்ளார்- ஆர்.பி.உதயகுமார்.

Continues below advertisement

யாருடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு என்ன?

மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்..,” 41பேர் உயிரிழந்த சூழலில் கூட்டணி நோக்கத்தோடு எடப்பாடி பழனிசாமி பேசுவதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, விஜயை கூட்டணிக்கு அழைப்பதாக யார் சொன்னார்கள். ஜனநாய நாட்டில் கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை உள்ளது. கருத்து கந்தசாமி போல டிடிவி தினகரன் தனது இருப்பை காட்டி கொள்ள எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து கூறியுள்ளார். எங்கள் இயக்கம் சேவை செய்யவே உள்ளது. ஆனால் இன்று சேவையை மறந்துவிட்டு  கட்சி நிலையை கவனத்தில் கொள்ளாமல் எடப்பாடி அண்ணனை திட்டுவதை தான் வேலையாக தினகரன் வைத்துள்ளார். ஜெயலலிதா சாவுக்கு காரணமான திமுகவிற்கு ஆதரவாக டிடிவி தினகரன் பேசுகிறார். திமுக ஆதரவாக பேசினாலே எங்களை பற்றி பேச அவருக்கு தகுதி போய்விட்டது. பாஜக கூட்டணியை விட்டு சென்றுவிட்ட பிறகு நாங்கள் யாருடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு என்ன?

Continues below advertisement

முதல்வரிடம் தான் கேட்க வேண்டும்.

கூட்டணியை விட்டு வெளியே போய்விட்டீர்கள். இனிமேல் உங்களுக்கு எங்கள் கூட்டணி மீது என்ன அக்கறை. செந்தில்பாலாஜி பழனியப்பன் தங்கத்தமிழ்செல்வன் என அமமுகவை விட்டு சென்றவர்கள் அதிகம். இன்னும் அமமுகவை விட்டு வெளியே செல்ல பலர் சுபமூகூர்த்தம் பார்த்து கொண்டுள்ளனர். டிடிவி தினகரனால் மக்களுக்கு ஒரு நன்மையும் இல்லை. அருணா ஜெகதீசன் ஆணையம் போட்டது ஏன்? காவல்துறை கையில் வைத்திருக்கும் முதல்வருக்கு தனது காவல்துறை மீது நம்பிக்கை இல்லையா. விஜய் மீது ஏன் கருணை என திருமாவளவன் பேசியது குறித்த கேள்விக்கு, திருமாவளவன் கேட்டது நியாயமான கேள்வியா? நியாமில்லாத கேள்வியா என முதல்வரிடம் தான் கேட்க வேண்டும்.

அண்ணாமலை ஒ.பி.எஸ், டி.டி.வியோடு பேசுவதை அதிமுக எப்படி பார்க்கிறதுஎன்ற கேள்விக்கு

அண்ணாமலை எங்களோடும் பேசிக்கொண்டு தான் உள்ளார். எல்லா கணக்கும் சரியாக வரும். கூட்டி கழித்து பாருங்கள்.

ஈபிஎஸ் கூட்டத்தில் தவெக கொடிகள் பறப்பது குறித்த கேள்விக்கு,

தொண்டர்களின் மனநிலை மக்களின் மனநிலையாகத்தான் தவெக கொடி அதிமுக கூட்டத்தில் பறக்கிறதை பார்க்கிறோம்.

இந்தியாவிற்கு வழிகாட்டுவேன் என முதல்வர் பேசியது குறித்த கேள்விக்கு,

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத துயரமாக 41 பேர்  உயிரிழந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. முதலில் முதலமைச்சர் இதற்கு பதில் சொல்ல வேண்டும். பிறகு இந்தியாவிற்கு வழிகாட்டும் நிலைமை குறித்து பேசலாம். கடந்த வாரம் சனிக்கிழமை மாலை வரை நம்மோடு இருந்த 41 பேர் காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரின் நடவடிக்கை இல்லாமல் போதிய பாதுகாப்பு கொடுக்காததால் 41 பேரும் பரலோகம் சென்றுவிட்டனர். இதில் ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் வழிகாட்டுவேன் என முதல்வர் பேசிக் கொண்டுள்ளார். முதலில் தமிழகத்துக்கு அவர் வழிகாட்டி கடமையைச் செய்யட்டும் பிறகு இந்தியாவிற்கு அவர் வழிகாட்டட்டும்.

திமுகவை வீழ்த்தும் நோக்கில் அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ளது. தொண்டர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். 2026ல் அதிமுக வெல்லும் என பேசினார்.