மாநிலங்களவையில் உறுப்பினர்களின் பதவி காலம் 6 ஆண்டுகள் ஆகும். மாநிலங்களவை எம்.பிகளை சட்ட மன்ற உறுப்பினர்களே தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் தமிழகத்தை பொறுத்த வரை 34 சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கலாம், இதற்கான தேர்தல் என்பது அடிக்கடி நடைபெறாது. மாநிலங்களவை உறுப்பினர்கள் பெரும்பாலும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் மாநிலங்களவையில் அலங்கரிக்கும் வகையில், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், உள்ளிட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.




அப்படித்தான் சமீபத்தில் கூட பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் ராஜ்யசபையில் உறுப்பினர்களாக உள்ளவர்களில் 72 பேர் இந்த வருடம் மார்ச் முதல் ஜூலை வரையிலான காலகட்டங்களில் ஓய்வு பெறுகின்றனர். இதனை முன்னிட்டு அவர்களை வழியனுப்பி வைக்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது.


இந்த விழாவை முன்னிட்டு 72 எம்பிக்களும் பிரதமர் மோடி, ராஜ்யசபை சபாநாயகர் வெங்கய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய மந்திரிகளும் கலந்து கொண்டு குழு போட்டோ எடுத்து கொண்டனர். இந்த வழியனுப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியபோது, "உறுப்பினர்கள் ஓய்வு பெறும் நிலையில், மீதமுள்ள உறுப்பினர்கள் அவையை முன்னெடுத்து செல்வதில் அவர்களது பொறுப்பு அதிகரித்து உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளின் உணர்வுகள், வலிகள் ஆகியவற்றை மேலவை பிரதிபலிக்கிறது.




உறுப்பினர் அவைக்கு அதிகம் பங்காற்றி இருக்கிறார் என்பதும் உண்மை. உறுப்பினர்களுக்கு அவை ஏராளம் அள்ளி தந்திருக்கிறது என்பதும் உண்மை" என்று நெகிழ்ந்து கூறியிருந்தார். ஓய்வு பெற்று செல்லும் ராஜ்யசபை உறுப்பினர்களுக்கு வெங்கையா நாயுடு அன்றைய தினம் இரவு உணவு விருந்து அளித்தார். இதில், 72 எம்பிக்களும் கலந்து கொண்டனர்.


அவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியில், அவையில் உள்ள 6 உறுப்பினர்களின் இசை கச்சேரி, பாட்டு படித்தல் உள்ளிட்ட பல்வேறு கலாசார நிகழ்வுகளும் நடத்தப்பட்டன. அந்த நிகழ்ச்சிதான் தற்போது சமூக வளைதலங்களில் பேசப்பட்டு வருகிறது. காரணம், எம்பிக்களே மைக்கை பிடித்து பாட்டுக்களை பாடி உள்ளனர்.




மாநிலங்களை உறுப்பினர்களான டோலாசென் வந்தனா சவான் உள்ளிட்ட உறுப்பினர்கள் பாட்டு பாடி அசத்திவிட்டனர். அதற்கு பிறகு திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவா பாட வந்தார்.திருச்சி சிவாவுக்கு பாட தெரியும் என்ற விஷயமே இந்த நிகழ்வில்தான் பலருக்கு தெரியவந்தது.கொடி மலர் என்ற பழைய படத்தில் வரும் "மெளனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்" என்ற பி.பி. சீனிவாஸ் பாடலை பாடினார்.


அமைதியும், எளிமையும் நிரம்பிய அந்த பாடலை சிவா, இனிமையாக பாடினார். இது ஒரு காதல் பாடலாகும். இந்த பாடலை கேட்டு குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எம்பிகள் கை தட்டி பாராட்டினார்கள். வெங்கையா நாயுடுவுக்கு இந்த பாட்டு மிகவும் பிடித்துவிட்டது போலும். அவரது ட்விட்டர் பக்கத்தில், சிவா பாடிய இந்த பாட்டைதான் பகிர்ந்துள்ளார். வெங்கையா நாயுடு ட்விட்டர் முழுக்க "மௌனமே பார்வையால்"  பாடல் வரிகள் நிரம்பி வழிகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண