செங்கல்பட்டு மாவட்டம்:

சட்டமன்ற தேர்தல் நிறைவு பெற்று திமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற கையோடு தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கட்சிகளின் பலம், பலவீனம் அறியும் தேர்தல் அல்ல. அதே நேரத்தில் மக்கள் யார் பக்கம் என்பதை எடை போடும் தேர்தல். ‛உள்ளாட்சியில் நல்லாட்சி’ என்கிற தாரகமந்திரத்தின் அடிப்படையில் இந்த தேர்தலை அரசியில் கட்சிகள் அவ்வளவு எளிதில் அனுகப்போவதில்லை. சில மாதங்களுக்கு முன் பொதுத்தேர்தலை சந்தித்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. சில மாதங்களுக்கு முன் அங்கிருந்த மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது? அங்கு எந்த கட்சி கோலோச்சியது? அங்கு அதிக ஓட்டு வாங்கிய கட்சி எது? என்பது குறித்து ஏபிபி நாடு ‛உள்ளாட்சி... உள்ளது உள்ளபடி‛ பகுதியில் பார்க்கலாம். அந்த வகையில் இன்று நாம் பார்ப்பது சென்னைக்கு மிக மிக அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டம்!

 

செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அந்தந்த ஒன்றியங்கள் வாரியான வாக்காளர்கள் குறித்த விபரம் இதோ:

ஒன்றியம் ஆண் வாக்காளர் பெண் வாக்காளர் இதர வாக்காளர்
அச்சிறுப்பாக்கம் 40,482 41,274 6
சித்தாமூர் 37,863 39,110 11
காட்டாங்கொளத்தூர் 1,16,492 1,21,032 33
லத்தூர்  34,944 36,014 11
மதுராந்தகம் 49,038 50,404 51
புனிததோமையார் மலை  1,43,488 1,45,254 34
திருக்கழுக்குன்றம் 64,851 67,013 10
திருப்போரூர் 82,425 85,062 31

 

மாவட்ட மொத்த வாக்காளர்கள் விபரம்: 

மாவட்டம் மொத்தம் ஆண்கள் பெண்கள் இதர
செங்கல்பட்டு 11,54,933 5,69,583 5,85,163 187

 

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதோ அதன் விபரம்:

முதல் கட்ட தேர்தல்

லத்தூர்

புனித தோமையார்மலை

திருக்கழுகுன்றம்

திருப்போரூர்

 

இரண்டாம் கட்ட தேர்தல்

அச்சிறுபாக்கம்

சித்தாமூர்

காட்டாங்கொளத்தூர்

மதுராந்தகம்

யாருக்கு பலம்....? ‛உள்ளது உள்ள படி’!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்சிவாரியாக பெற்ற வாக்குகளின் அடிப்படையிலும், கட்சிகள் பெற்ற வெற்றியின் அடிப்படையிலும் அந்த மாவட்டத்தில் கட்சிகளின் பலத்தை காணலாம்.

சட்டமன்ற தொகுதிகள்

சோழிங்கநல்லூர்

பல்லாவரம்

தாம்பரம்

செங்கல்பட்டு

திருப்போரூர்

செய்யூர்(தனி)

மதுராந்தகம்(தனி)

பிரிக்கப்பட்ட, புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அந்த 7 தொகுதிகளிலும் வித்தியாசமான வாக்குப்பதிவு நடந்துள்ளது. ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு விதமான மனநிலையில் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இருப்பினும் மொத்தமுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 6 சட்டமன்ற தொகுதிகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெற்றுள்ளன. மதுராந்தகம் தனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதோ தொகுதி வாரியாக கட்சிகளின் பலம் குறித்து பார்க்கலாம்...

1.சோழிங்கநல்லூர்

 

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
அரவிந்த் ரமேஷ் திமுக 171,558
கே.பி.கந்தன் அதிமுக 136,153
ராஜூவ் மக்கள் நீதி மய்யம் 30,284
ஆர்.பி.முருகன் தேமுதிக(அமமுக) 3,912
மைக்கேல் வின்சென்ட் சேவியர் நாம் தமிழர் 38,872

 


கூட்டணி வாக்கு சதவீதம்
திமுக 44.18%
அதிமுக 35.06%
மக்கள் நீதி மய்யம் 7.80%
அமமுக 1.01%
நாம் தமிழர் 10.01%

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தேர்தலில் அதிமுக-திமுக நேரடி போட்டி போட்ட நிலையில் திமுகவின் அரவிந்த் ரமேஷ் 35,405 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றி வித்தியாசத்தை விட நாம் தமிழர் கட்சி வாங்கி ஓட்டு அங்கு அதிகம். நாம் தமிழர் கட்சி 38,872 வாக்குகளை அங்கு பெற்றுள்ளது. அதே போல மக்கள் நீதி மய்யமும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை அங்கு பதிவு செய்துள்ளது. அமமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக 5 ஆயிரம் ஓட்டுகளை கூட அங்கு பெறவில்லை. அந்த வகையில் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஓட்டுகள் பெரிய அளவில் அங்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த முறை உள்ளாட்சியில் அவை எது மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

 

2.பல்லாவரம்

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
கருணாநிதி திமுக 126,427
சி.ராஜேந்திரன் அதிமுக 88,646
செந்தில்ஆறுமுகம் மக்கள் நீதி மய்யம் 20,612
முருகேசன் தேமுதிக(அமமுக) 3,718
மினிஸ்ரீ நாம் தமிழர் 21,362

 


கூட்டணி வாக்கு சதவீதம்
திமுக 47.49%
அதிமுக 33.30%
மக்கள் நீதி மய்யம் 7.74%
அமமுக 1.40%
நாம் தமிழர் 8.02%

பல்லாவரம் தொகுதி திமுகவிற்கு பெருவாரியாக ஓட்டு கிடைத்த தொகுதிகளில் ஒன்று. 37,781 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை திமுக தோற்கடித்துள்ளது. நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் வாங்கிய வாக்குகளை இரண்டாக கூட்டினால் தான் வெற்றி வித்தியாசத்திற்கு தேவையான எண்ணிக்கை வருகிறது. அப்படி பார்க்கும் போது திமுகவிற்கு சாதகமான வாக்குகள் அங்கு குவிந்து இருப்பதை காண முடிகிறது. அதே நேரத்தில் அதிமுகவின் பிளவு பிரிவான அமமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் 3718 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இதை வைத்து பார்க்கும் போது அதிமுகவின் ஓட்டுகள் அங்கு பிரிக்கப்படவில்லை. பலவீனமாகவே உள்ளது என்பதை அறிய முடிகிறது. 

3.தாம்பரம்

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
எஸ்.ஆர்.ராஜா திமுக 116,840
டி.கே.எம்.சின்னய்யா அதிமுக 80,016
சிவ இளங்கோ மக்கள் நீதி மய்யம் 22,530
கரிகாலன் அமமுக 4,207
சுரேஷ்குமார் நாம் தமிழர் 19,494


கூட்டணி வாக்கு சதவீதம்
திமுக 46.93%
அதிமுக 32.14%
மக்கள் நீதி மய்யம் 9.05%
அமமுக 1.69%
நாம் தமிழர் 7.83%

செங்கல்பட்டு மாவட்டத்தின் பிற பகுதியைப் போலவே தாம்பரம் தொகுதியிலும் திமுகவின் கரம் ஓங்கியிருக்கிறது. தொகுதிக்கு பிரபலமான அதிமுகவின் சின்னய்யாவை 36,824 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ராஜா வெற்றி பெற்றிருக்கிறார். இவரது வெற்றி வித்தியாசத்தை எந்த ஒரு தனிக்கட்சியும் தங்கள் வாக்காக பெறவில்லை. மக்கள் நீதி மய்யம்-நாம் தமிழர் ஓட்டுகளை கூட்டினால் தான் அந்த எண்ணிக்கை வருகிறது. அமமுக 4207 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. அதன் படி கூட்டணியாகவும், தனிக்கட்சியாகவும் திமுக தாம்பரம் தொகுதியில் வலுவாக உள்ளது. 

4.செங்கல்பட்டு

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
வரலட்சுமி மதுசூதனன் திமுக 130,573
கஜேந்திரன் அதிமுக 103,908
முத்து தமிழ்செல்வன் ஐஜேகே (மக்கள் நீதி மய்யம்) 4,146
சதீஷ்குமார் அமமுக 3,069
சஞ்சீவிநாதன் நாம் தமிழர் 26,868

 


கூட்டணி வாக்கு சதவீதம்
திமுக 47.64%
அதிமுக 37.91%
மக்கள் நீதி மய்யம் 1.51%
அமமுக 1.12%
நாம் தமிழர் 9.80%

செங்கல்பட்டு தொகுதியை பொருத்தவரை திமுக-அதிமுக பலப்பரிட்சை இருந்தது என்று தான் கூற வேண்டும். அங்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் 26,665 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அது நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளை விட குறைவானது. அதே நேரத்தில் அங்கு மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் போட்டியிட்ட ஐஜேகே வேட்பாளர் வெறும் 4146 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். இது பிற தொகுதிகளில் மநீம பெற்ற வாக்குகளை விட மிகக்குறைந்த வாக்கே. அமமுக வழக்கம் போல பிற தொகுதிகளில் பெற்ற அதே 3K+ வாக்குகளை தான் இங்கும் பெற்றுள்ளது. பாமக கூட்டணியில் அதிமுக பெற்ற வாக்கு, பாமக வெளியேற்றத்தால் இன்னும் குறையலாம். 

5.திருப்போரூர்

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
எஸ்.எஸ்.பாலாஜி விசிக (திமுக) 93,954
ஆறுமுகம் பாமக (அதிமுக) 92,007
லாவண்யா மக்கள் நீதி மய்யம் 8,194
கோதண்டபாணி அமமுக 7,662
மோகனசுந்தரி நாம் தமிழர் 20,428


கூட்டணி வாக்கு சதவீதம்
திமுக 41.44%
அதிமுக 40.58%
மக்கள் நீதி மய்யம் 3.61%
அமமுக 3.38%
நாம் தமிழர் 9.01%

திமுக கூட்டணியில் சார்பில் பொதுத்தொகுதியில் போட்டியிட்டு விசிக வேட்பாளர் வெற்றி பெற்ற தொகுதி. இங்கு அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக.,வை விசிக வெறும் 1,947 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இது அமமுக பெற்ற வாக்குகளை விட மிகமிக குறைவு. நாம் தமிழர் இங்கு 20 ஆயிரத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. மநீமவும் 8 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்கிறது. திமுக-அதிமுக நேரடியாக மோதவில்லை என்பதால் இந்த முடிவு வந்ததா, அல்லது உண்மையிலேயே இங்குள்ள கட்சிகளின் பலம் இவ்வளவு தானா என்பதை உள்ளாட்சி முடிவுகள் தெளிவுப்படுத்தலாம். 

6.செய்யூர்(தனி)

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
பாபு விசிக (திமுக) 82,750
கனிதா சம்பத் அதிமுக 78,708
அன்பு தமிழ் சேகரன் மக்கள் நீதி மய்யம் 1,968
சிவா தேமுதிக (அமமுக) 3,054
ராஜேஷ் நாம் தமிழர் 9,653


கூட்டணி வாக்கு சதவீதம்
திமுக 46.20%
அதிமுக 43.94%
மக்கள் நீதி மய்யம் 1.10%
அமமுக 1.71%
நாம் தமிழர் 5.39%

செய்யூர் தனித்தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விசிக, அதிமுகவை 4,042 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது நாம் தமிழர் பெற்ற வாக்குகளை விட மிகக்குறைந்த எண்ணிக்கையாகும். மக்கள் நீதி மய்யம் இங்கு மிகக்குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளது. அது திமுக-அதிமுகவிற்கு கொஞ்சம் ஆறுதல். அதே நேரத்தில் நாம் தமிழர் தனது வாக்கு சதவீதத்தை இங்கு தக்க வைத்துள்ளது. அமமுக+தேமுதிக கூட்டணி வழக்கம் போலவே 3 ஆயிரம் ஓட்டுகளை பெற்றுள்ளனர். அங்கு முடிவுகள் எப்படியும் மாறலாம். 

7.மதுராந்தகம்(தனி)

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
மரகதம் குமரவேல் அதிமுக 86,646
மல்லை சத்யா மதிமுக (திமுக) 83,076
தினேஷ் மக்கள் நீதி மய்யம் 1,488
மூர்த்தி தேமுதிக (அமமுக) 2,137
சுமிதா நாம் தமிழர் 9,293


 

கூட்டணி வாக்கு சதவீதம்
திமுக 44.70%
அதிமுக 46.62%
மக்கள் நீதி மய்யம் 0.80%
அமமுக 1.15%
நாம் தமிழர் 5.00%

மதிமுகவின் முக்கிய பிரமுகராக பார்க்கப்பட்ட மல்லை சத்யாவை அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் 3,570 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இது நாம் தமிழர் பெற்ற வாக்குகளை விட மிகக்குறைவு. மக்கள் நீதி மய்யம் மற்றும் தேமுதிக பெற்ற வாக்குகளை கூட்டினால் அப்படியே வாக்கு வித்தியாசம் வருகிறது. மக்கள் நீதி மய்யம், அமமுக கூட்டணிக்கு பெரிய அளவில் இங்கு வாக்குகள் கிடைக்கவில்லை. மக்கள் நீதி மய்யம் வாக்கு சதவீதம் மிக மிக குறைவாகவே இங்கு உள்ளது. நூலிழையில் வெற்றியை தவறவிட்டது மதிமுக. அதிமுக தனக்கு போதுமான வாக்குகளை பெற்றிருக்கிறது. கடந்த முறை பாமக, உடன் இருந்தது. இம்முறை பாமக தனித்து போட்டியிடுவது அதிமுகவிற்கு சிக்கலை தரலாம். 

 

கட்சி பலம் பலவீனம்
திமுக

கூட்டணி தொடர்கிறது

ஏற்கனவே பெற்ற வெற்றி

ஆளுங்கட்சி என்கிற சாதகம்

குறுகிய காலத்தில் ஆட்சிக்கு கிடைத்த நற்பெயர்

பண பலம்

அதிமுகவிற்கு கிடைத்த வாக்குகள்

அதிமுக வாக்கு சதவீதம்

கூட்டணி பங்கீடு

விஜய் மக்கள் இயக்கம்

அதிமுக

கடந்த கால வாக்கு விகிதம்

கைவசம் ஒரு வெற்றி

பண பலம்

பாமக கூட்டணி வெளியேற்றம்

மநீம, நாம் தமிழர் வாக்குகள்

எதிர்கட்சியாக தேர்தல் சந்திப்பு

விஜய் மக்கம் இயக்கம்

நாம் தமிழர்

சட்டமன்றத்தில் கிடைத்த வாக்குகள்

சீரான வாக்கு விகிதம்

கூட்டணி இல்லாதது

உள்ளூர் செல்வாக்கு இல்லாத வேட்பாளர்கள்

பண பலம்

மாவட்டத்தில் முன்னெடுக்கும் தலைமை

மக்கள் நீதி மய்யம்

கமல் என்கிற அடையாளம்

மிகக்குறைவான வாக்கு விகிதம்

கட்சியில் ஏற்பட்ட பிளவு

மாவட்டத்தில் முன்னேடுக்கும் தலைமை

பண பலம்