விழுப்புரம்: 


விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 28 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 293 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 688 கிராம ஊராட்சி தலைவர், 5,088 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 6,097 பதவியிடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.  ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட திங்கள்கிழமை ஒரே நாளில் 9,644 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.


மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினா் பதவிகளுக்கு 51 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினா் பதவிகளுக்கு 693 பேரும், கிராம ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 2,106 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினா் பதவிகளுக்கு 6,794 பேரும் என மொத்தம் 9,644 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.இதுவரை மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினா் பதவிகளுக்கு 61 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினா் பதவிகளுக்கு 790 பேரும், கிராம ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 2947 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினா் பதவிகளுக்கு 11,154 பேரும் என மொத்தம் 14,952 போ் ஊரக உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா். மனு தாக்கல் செய்ய புதன்கிழமை (செப்.22) கடைசி நாளாகும்.


 


 



 


கள்ளக்குறிச்சி:


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 3,773 உள்ளாட்சி பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 4 நாட்களில் வேட்புமனு தாக்கலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர், ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 47 பேர், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 491 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,663 பேர் என 3,203 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.


தொடர்ந்து நேற்று 5-வது நாளாக வேட்பு மனுதாக்கல் நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 46 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 461 பேர், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 1,031 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,527 பேர் என நேற்று ஒரே நாளில் 5,065 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை நிறைந்த பவுர்ணமி நாள் என்பதால் ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 5 நாட்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 48 பேர், ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 508 பேர், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 1,522 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 6,190 பேர் என மொத்தம் 8,268 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.