காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்து முயன்று வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அந்த வகையில் காவிரி ஆணையம் கூட்டத்தில் மேகதாதுவில் அணை குறித்து விவாதிக்க கூடாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் ஆஜராண மூத்த வழக்கறிஞர் வாதிட்டபோது, மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்திற்கான நீரின் அளவு குறையும் என்பதை குறிப்பிட்டார். குறிப்பாக 177புள்ளி டிஎம்சி தண்ணீர் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தார். மேலும் மேகதாது அணை குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
மேலும் கர்நாடக அரசு சார்பில் மேகதாது அணை திட்ட ஆய்வை நிறுத்தி வைக்க கூடாது என்றும் மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்திற்கு கிடைக்கும் நீர் குறையாது என்றும் வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மேகதாது விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்கலாம்; ஆனால் முடிவெடுக்க கூடாது என்று கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்
(i) கபினி நீர்த்தேக்கத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள கபினி துணைப் படுகையின் கட்டுப்பாடற்ற நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து காவிரி ஆற்றில் வரும் நீர் வரத்து, கிருஷ்ண ராஜ சாகரின் கீழுள்ள காவிரி ஆற்றின் பிரதான ஓடையின் நீர்ப்பிடிப்பு, சிம்ஷா, அர்காவதி மற்றும் சுவேர்ணவதி துணைப் படுக்கைகள் மற்றும் பல்வேறு சிறிய நீரோடைகள் வழியான நீர் வரத்து .
(ii) கபினி நீர்த்தேக்கங்களிலிருந்து ஒழுங்குபடுத்தப்பட்ட நீர் வரத்து;
(iii) கிருஷ்ண ராஜ சாகர நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் ஒழுங்குபடுத்தப்பட்ட நீர் வரத்து
ஆகிய மூன்றும் தமிழக நீர் வாரத்துக்கு முக்கியக் காரணம். ஆனால், 67.17 TMC கொள்ளவு கட்டப்பட்டால் இந்த நீர் வரத்து முற்றிலும் பாதிக்கப்படும். கபினி மற்றும் கிருஷ்ணா ராஜா சாகர் கீழ்ப் பகுதிகளில் இருந்து வரும் கட்டுப்பாடற்ற நீர் வரத்தையும் கர்நாடக அரசு தடுக்க முயல்வதாக தமிழ்நாடு அரசு குற்ச்சாட்டு.
நீர்ப்பங்கீட்டை பாதிக்கும் என்று கூறி கர்நாடக அரசின் அணைகட்டும் திட்டத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஒன்றிய நீர் ஆணையத்திடம் நிராகரித்து திருப்பி அனுப்பியிருக்க வேண்டும்.
பில்லிகுண்டுலுவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வருடாந்திர நீர் அளவை பூர்த்தி செய்யும் ஒரு பகுதியாக இந்த இடைநிலை நீர்பிடிப்பு பகுதிகள் உள்ளது. இந்த அனைகட்டுவதன் மூலம் கர்நாடக நீர் வரைத்தை தடுக்க முயல்கிறது. இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என கூடுதல் பாதில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.