நடந்து முடிந்த தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் பெருமான்மை இடங்களை பெற்று தி.மு.க ஆட்சி அமைக்க உள்ளது. அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடக்கிறது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முக்கிய அரசியல் தலைவர்கள், பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் தமிழ் திரைத்துறையினர் பலரும் மு.க. ஸ்டாலினுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் .
அவசியம் அறிந்து ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திகாட்டியிருக்கும் தமிழக மக்களுக்கு அன்பும் நன்றியும் தமிழகத்தின் நம்பிக்கை முதல்வராக பொறுப்பேற்கும் ஐயா
@mkstalin
அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும் என்று தனது வாழ்த்துக்களை பதிவு செய்து இருந்தார் .
இயக்குனர் ப .ரஞ்சித் தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவு செய்து இருந்தார் அதில் .
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்கான, தங்களது தெளிவான நம்பிக்கையான தங்களை
@mkstalin
தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்! சாதி மத வேறுபாடுகளை கடந்து சமூக நீதியை நிலை நாட்ட தங்களது தலைமையிலான ஆட்சியில் சமரசமற்ற முன்னெடுப்புகள் அமைய வாழ்த்துகள் ! என்று கூறியிருந்தார் .
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .
நடிகர் சிவகார்த்திகேயன் தனது சார்பில் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.
தமிழக தேர்தலில் பெரும் வெற்றி பெற்றிருக்கும் mkstalin
அய்யா அவர்களுக்கும்,தன் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கும் Udhaystalin
சாருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!!!
என்று பதிவிட்டு இருந்தார் .
நடிகர் விஷால் தனது வாழ்த்துச் செய்தியில் எங்கள் முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே
அடுத்த சில ஆண்டுகளில் வரவிருக்கும் நல்ல விஷயங்களுடன் தமிழ் நாடும் வளரட்டும் மற்றும் நமது உடைந்த திரைப்படத் துறையில் மிகவும் தேவையான ஆக்ஸிஜனை எதிர்பார்க்கிறது .
என்று பதிவிட்டு இருந்தார் .
நடிகர் கார்த்திக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தனது வாழ்த்தை தெரிவித்து இருந்தார் .
மிக முக்கிய தருணத்தில், தமிழக முதல்வராகும் திரு. ஸ்டாலின்
அவர்கள், நமது தனிப்பெரும் அடையாளங்களான சமூக நீதி, மத நல்லிணக்கம்,கல்வி, மருத்துவம், சுகாதாரத்தோடு, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து,மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைத்திட வாழ்த்துக்கள்! என்று பதிவிட்டு இருந்தார்