தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்கள் தொடர்பான விவாதத்திற்கு நானே வருகிறேன். என்னை கூப்பிடச் சொல்லுங்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்திருக்கிறார்.


நானே வருகிறேன். ரெடியா ?


தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்கள் குறித்து விவாதம் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தயாரா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்ட நிலையில், இதற்கெல்லாம் முதல்வர் செல்ல வேண்டிய அவசியமில்லை. என்னை அழைக்கச் சொல்லுங்கள், நானே இது குறித்து விவாதம் நடத்த தயாராக இருக்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 


அதே நேரத்தில் அரசின் நலத் திட்டங்களுகு கலைஞர் கருணாநிதி பெயரை வைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், கலைஞர் பெயரை வைக்காமல் பின்னர் யார் பெயரை வைப்பது ? யார் பெயரை வைக்க வேண்டுமோ அவர் பெயரைத் தான் திட்டங்களுக்கு வைத்து வருகிறோம் என்றும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.