தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சியின் சார்பாக அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். கட்சியின் மாநிலத் துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்தார். தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராக இருந்த எல்.முருகன் தற்போது மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றதை அடுத்து கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் அண்ணாமலையை நியமித்து பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இந்நிலையில், சமூக வலைதளத்தில் #Annamalai என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகின்றது. மேலும், புதிதாக பதவி ஏற்றிருக்கும் அண்ணாமலைக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.