Nainar Nagenthiran: பாரபட்சமின்றி தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

”நன்றி” சொன்ன நயினார் நாகேந்திரன்:

குடியரசு துணை தலைவர் பதவிக்கு நடைபெற உள்ள தேர்தலில், பாஜக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு கட்சி வேறுபாடுகளை தாண்டி தமிழ்நாட்டு அரசியல் கட்சியினர் ஆதரவு அளிக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி இருந்தது. அதன்படி, திமுக கூட்டணி மற்றும் ஆதரவு கட்சிகளை தவிர மற்ற கட்சிய்இனர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளித்து இருந்தனர். இந்நிலையில் தான், கட்சி பாகுபாடின்றி கூட்டணியில் இருக்கின்ற மற்றும் இல்லாத அரசியல் கட்சி தலைவர்களுக்கும், பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.

நயினார் போட்ட ட்வீட்

நயினார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள நமது மண்ணின் மைந்தரும், மாண்புமிகு மகாராஷ்டிர ஆளுநருமான ராதாகிருஷ்ணன் அண்ணனுக்கு தமிழகத்தின் தலைவர்கள் தங்களது வரவேற்பையும் ஆதரவையும் அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

குறிப்பாக, அஇஅதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர். ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் GK வாசன், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம், வி,கே. சசிகலா,  தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா, புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரி வேந்தன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும் தமிழக பாஜக சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணியை உறுதிப்படுத்தும் பாஜக:

மேற்குறிப்பிடப்பட்ட கட்சிகளில் அதிமுக, அமமுக ஆகியவை ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருப்பது உறுதியாகிவிட்டது. பாமக மற்றும் தேமுதிக ஆகியவை சட்டமன்ற தேர்தல் கூட்டணியை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேநேரம், அன்புமணியும், பிரேமலதாவும் பாஜக கூட்டணியில் இடம்பெற விரும்புவதாக கூறப்படுவதையே, நயினார் இந்த பதிவு காட்டுகிறது. பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக ஓபிஎஸ் அறிவித்தாலும், அவரை மீண்டும் தங்கள் பக்கம் இழுக்கவே பாஜக தலைமை விரும்புகிறதாம். திமுகவின் மிகப்பெரிய பலமாக அதன் வலுவான கூட்டணியே பார்க்கப்படுகிறது. அதற்கு நிகரான கூட்டணியை அமைக்க, வாய்ப்புள்ள அனைத்து கட்சிகளையும் தங்கள் பக்கம் இழுக்க பாஜக முனைப்பு காட்டுகிறதாம்.