விவசாயிகளிடமிருந்து அரசே நேரடியாக நெற்பயிரை கொள்முதல் செய்தால் ஏக்கருக்கு ரூபாய் 15,000 விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் திண்டுக்கல்லில் ஜி. கே வாசன் பேட்டி.

 

 

திண்டுக்கல்லில் தமிழ் மாநில காங்கிரஸ்  கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்துகொள்ள வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: 

 

த.மா.க மக்கள் நம்பிக்கை பெற்று  வரும் காலத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற பிரதிநிதிகளை பெற பணி செய்கிறோம். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில்  கோட்பாடுகள் எதையும் கடைபிடிக்கவில்லை, மக்கள் நம்பிக்கையை பெற ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த  வேண்டும், திமுக தேர்தல் நேரத்தில் பல்வேறு வாக்குறுதி  அளித்து உள்ளது. அந்த வாக்குறுதிகள் மீது மக்கள் எதிர்பாப்பு அதிகம் உள்ளது.  எனவே மக்கள் தேவைகளை திமுக நிறைவேற்ற வேண்டும். அதே போல  ஆட்சிக்கு வந்த பின் சட்டமன்றத்தில் அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என நினைவு படுத்துகிறோம். மழை காலம் தொடங்க உள்ளதால் மக்களை பாதிக்காத வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு செய்ய வேண்டும். சுகாதாரம் தொடர்பான முன் எச்சரிக்கை தேவை. காவரிஆற்றில் நச்சு கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அறுவடை செய்யபட்ட நெற்பயிரை அரசு கொள்முதல் செய்தால் ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து மக்களுக்கு சந்தேகம் உள்ளது அதை அரசு போக்க வேண்டும். அரசு காவல்துறை அதிகாரிகளை அழைத்து பேசி ரவுடிகளை கைது செய்து வருகிறது. மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் முன் எச்சரிக்கை தேவை. பெட்ரோல் டீசல் விலையை மத்திய  அரசு இணைந்து குறைக்க வேண்டும். திமுக அரசு மக்களுக்கு கொடுத்த வக்குறுதிகளை அந்த காலக் கெடுக்களுக்குள் செய்ய வேண்டும். கொரோனா கள பணியில் உயிரிழந்தவர்களுக்கு  அனைத்து மாநில அரசுகளும் முன்னுரிமை வழங்க வேண்டும். நிதி பற்றாக்குறை  காரணம் காட்டி திமுக அறிவித்த திட்டங்களை செயல்படுத்த தாமதம் செய்து வருவதால் அறிவித்த திட்டங்கள் ஏமாற்று வேலையோ என மக்கள் நினைக்கின்றனர் என்பதை தான் தமாக சுட்டி கட்டுகிறது.

நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை எழுத மாணவர்களுக்கு இன்னும் பயிற்சி கொடுத்து மாணவர்கள் எந்த ஒரு தேர்வாக இருந்தாலும் தமிழக மாணவர்கள் தான் அதிக அளவில் வெற்றி பெறுவார்கள் என்று சொல்லும் அளவிற்கு வழிவகைகள் செய்ய வேண்டும் நீட் தேர்வு குறித்து மாணவர்களுக்கு தவறான நம்பிக்கை அளிக்க வேண்டாம் என தெரிவித்தார்.