தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், தேர்தல் பறக்கும் படையினரும் கண்காணிப்பு பணியை தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில், திருப்பத்தூரில் தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.21,000 பறிமுதல் செய்யப்பட்டது.




இதுதொடர்பாக, அமைச்சர் கே.சி.வீரமணி உள்ளிட்ட சிலர் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இந்த புகாரின் மீது திருப்பத்தூர் டி.எஸ்.பி. தங்கவேலு உடனடியாக வழக்குப்பதிவு செய்யாமல் தாமதப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக, டி.எஸ்.பி.தங்கவேலு மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, திருப்பத்தூர் டி.எஸ்.பி. தங்கவேலுவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் பணிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.