கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலன் விசாரித்து மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.


 பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் கூறியதாவது-


கள்ளக்குறிச்சியில் தற்போது வரை 185 நபர்கள் கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, சேலம், விழுப்புரம் ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் உள்நோயாளிகளாக 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.50 பேர் மரணம் அடைந்துள்ளனர். மிகப்பெரிய அளவிலான இந்த பாதிப்புக்கு தீர்வு என்ற வகையில் விரைந்து பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்து வருகிறார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ரூபாய் 10 லட்சம் நிவாரணம் அறிவித்து வழங்கியுள்ளார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு மது அருந்திய வரங்களையும் கண்டறிந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



மருத்துவமனையில் போதிய மருந்துகள் இருப்பு உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மருந்து இல்லை என்று கூறியிருந்தார். இது குறித்து மருவத்துவ அதிகாரிடம் விசாரித்த போது 4 கோடியே 42 லட்சம் மருந்து கையிருப்பில் இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் மருந்து இல்லை என்று ஒரு தவறான தகவலை பரப்புவது சரியானது அல்ல. அரசு மருத்துவர்களின் சேவையை மிக எளிதாக குறை சொல்லி விட்டுப் போவது சரியானதாக இருக்காது. விஷ சாராயம் குடித்தவர்களுக்கு முப்பது மணி நேரத்திற்குள்ளாகவே அவர்களுக்கு லிவர் பெயிலியர் கிட்னி பெயிலியர் இது போன்று ஒவ்வொரு ஆர்கான் செயல் இழக்கப்படுகிறது. இவையெல்லாம் மருத்துவரீதியாக சொல்லப்பட்ட காரணங்கள் இதற்கும் மருந்துக்கும் சம்பந்தம் இல்லை. இறந்தவர்கள் யாரையாவது சோதனை பண்ண வேண்டும் என்றால் நீங்களே சோதனை செய்து பாருங்கள். இறந்தவர்களின் ஒவ்வொரு உடல்களையும் சோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம் அவர்கள் மருந்து இல்லாமல் இருந்தார்களா அல்லது மெத்தனால் பாதிப்பினால் இருந்தார்களா என்பதை அறிந்து கொள்ளலாம்.


இந்த மருந்தால் யாரையும் காப்பாற்ற முடியாது. மெத்தனால் சாப்பிட்டால் உடனடியாக ஆர்கான் செயலிழந்து விடும். இப்பொழுது கூட ஆபத்தான நிலையில் 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு அன்புமணியும் நீங்களும் கூட எந்த மருந்து வேண்டும் என்று கேட்கின்றீர்களோ நாங்கள் அந்த மருந்து வாங்கிக் கொடுக்கிறோம் காப்பாற்றுங்கள் . நீங்கள் கேட்கும் மருந்து நாங்கள் வெளிநாட்டில் இருந்தாலும் வாங்கி தருகிறோம் அனைவரும் காப்பாற்றி கொடுங்கள். கல்லச்சாராயம் குடித்ததில் பாண்டிச்சேரியில் சிகிச்சை பெற்று வருபவர்களில் நான்கு பேருக்கும் ,கள்ளக்குறிச்சியில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 4 பேருக்கு கண்பார்வை பாதிக்கும் நிலை உள்ளது. கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மரக்காணத்தில் நடந்த சாராய உயிரிழப்பு தொடர்பாக 21 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 8 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பதினாறு காவல்துறை அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆறு வழக்குகள் பதியப்பட்டு 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் ஐந்து பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.



தற்போது ஒரு நபர் ஆணையும் சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது விசாரணை முடிந்த பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 50 வருடங்களாக இந்தியாவில் எந்தெந்த மாநிலத்தில் சாராய பலிகள் நடந்துள்ளது என்ற பட்டியல் என்னால் சொல்ல முடியும். இதனை சொன்னால் லாபணிய அரசியலாகிவிடும். இதே தமிழ்நாட்டில் 2001 இல் 53 பேர் உயிரிழந்தனர் 200 பேர் கண்பார்வை பாதிக்கப்பட்டது. அப்போ ஆட்சி நடத்தியவர் ஜெயலலிதா. இப்போ அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி முதல்வர் பதவி விலக வேண்டும் என்று சொல்பவர் அப்பொழுது எங்கே சென்றிருந்தார். தூத்துக்குடியில் 13 பேர் துப்பாக்கில் சுட்டுக் கொல்லப்பட்டனர் அப்போ பழனிச்சாமியை கேட்டபோது நான் டிவி பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று கூறினார் . அப்படிப்பட்டவர்கள் எல்லாம் இன்று இப்படி பேசுவது அரசியல் என்று சொல்லாமல் எப்படி கூற முடியும். வட மாநில இளைஞர் ஒருவர் விஷ சாராயம் குடித்து உயிரிழந்து உள்ளார். அவரது விபரம் குறித்து அடையாளம் காணப்பட்டுள்ளது. சாராயம் குடித்தவர்கள் குறித்து கண்டறிந்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. என தெரிவித்தார்.