அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 105-வது பிறந்த நாள் விழாவை இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், அதிமுகவில் இருந்து கட்சித் தலைமைக்கு எதிராக செயல்பட்டதாகவும் கட்சி கட்டுப்பாட்டை மீறி தாகவும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை அக்கட்சியின் தலைமை கடந்த டிசம்பர் மாதல் ஒன்றாம் தேதி நீக்கியது. இதனையடுத்து அவ்வப்போது எம்ஜிஆர் நினைவு நாள் மற்றும் பிறந்தநாள் சமயங்களில் வால்போஸ்டர் மூலம் தனது ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகிறார் அன்வர்ராஜா.,

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- எம்ஜிஆர் படித்த யானையடி பள்ளியில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை



 

இன்று எம்ஜிஆரின் 105வது பிறந்த நாளையொட்டி அவர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், என்ன பேச வேண்டும், எப்போது பேச வேண்டும், எங்கு பேசவேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என ஒரு நியதி உண்டு.  நான் தற்போது அமைதியாக இருக்க வேண்டிய காலகட்டம் எனவே அமைதியாக இருக்கிறேன். மேலும், என்னுடைய நிலைப்பாடு குறித்து எம்ஜிஆர் பிறந்த நாளை ஒட்டி எனது சார்பாக ஒட்டியுள்ள சுவரொட்டிகளில் குறிப்பிட்டுள்ளேன். அதில் இந்தப் பிறவிக்கு பிறகு எனக்கு இன்னொரு பிறவி இருக்கிறது என்றால் அதிலும் எம்ஜிஆர் தான் எனக்கு தலைவராக வரவேண்டும். அவரை தவிர நான் யாரையும் மானசீகமாக நேசிக்கவில்லை. அவருக்கு நிகரான தலைவர் வேறு யாரும் இல்லை என தெரிவித்தார்.

 



 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- நீ ஆம்பளயா என்று கேட்டதால் ஆத்திரம் - காதல் பிரச்னையில் காதலனின் நண்பனை போட்டுத்தள்ளிய அண்ணன்

மேலும் எனக்கென்று தனியாக யாரும் ஆதரவாளர்கள் இல்லை, அதிமுக தொண்டர்கள் தான் எனது ஆதரவாளர்கள். நான் இன்னும் அண்ணா திமுகவில் தான் இருக்கிறேன். தற்காலிகமாக என்னை விலக்கி வைத்திருக்கிறார்கள். அண்ணா திமுக ஒரு கட்டுப்பாட்டுக்கு பெயர்போன கட்சி. மீண்டும் கட்சியில் சேருவதற்காக நான் எந்த முயற்சியும் எடுக்க வில்லை. எங்கள் தலைவர்கள் நினைத்தால் நேரம் வரும்போது என்னை சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் இதுவரை யாரும் என்னை கட்சி தலைமையிலிருந்து தொடர்பு கொள்ளவில்லை தெரிவித்துள்ளார். அவர் இவ்வாறு பேசியிருப்பது, மீண்டும் தன்னை கட்சியில் இணைத்துக் கொள்ள அதிமுக தலைமைக்கு தூது விட்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.