பசும்பொன் முத்துராமலிக்கத் தேவரின் 116- வது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பசும்பொன் சென்று முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை:
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பசும்பொன் சென்று, அங்கு உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார். அப்போது அவருடன் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் மற்றும் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “தேவரின் மறைவுக்கு பிறகும் அவர் இன்றளவும் வீரராக போற்றப்படுகிறார். இன்னாருக்கு இன்னது தான் என சொல்வது ஆரியம், எல்லோருக்கும் உண்டு என்பது சொல்வது திராவிடம். இந்த வித்தியாசத்தையும் உண்மையும் தமிழக ஆளுநர் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொள்ளிக்கிறேன்.
பா.ஜ.க. அலுவலமாக மாறிய ஆளுநர்மாளிகை:
மீனவர்கள் தொடர்ச்சியாக தாக்கப்படுகிறார்கள் என்பது குறித்து ஒன்றிய அரசிடம் ஏற்கனவே கூறியுள்ளோம். ஆளுநர் மாளிகை உள்ளே பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. வாசலில் வீசப்பட்டது. இதனுடைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல் துறை ஊடக நண்பர்களிடம் விளக்கம் அளித்துள்ளனர். ஆளுநர் மாளிகை திட்டமிட்டு பொய்களை பரப்புகின்றனர் வேறு ஒன்றுமில்லை. ஆளுநர் பிஜேபியாக மாறிவிட்டார். ஆளுநர் அலுவலகம் பாஜக அலுவலகமாக மாறிவிட்டது இது ஒரு வெட்கக்கேடு” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: முதல்வர் அரசியலுக்கு அப்பாற்பட்டு என் மீது அன்பும், மதிப்பும் காட்டி இருக்கிறார் - பழ.நெடுமாறன் நெகிழ்ச்சி
மேலும் படிக்க: Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!