சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெறும் கம்பன் கழக விழாவில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வருகை தந்தார். அவருக்கு பா.ஜ.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தர ராஜன் செய்தியாளர்களிடம்..,” இன்று மகிழ்ச்சியா நாள். 12-14 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஆரம்பித்துள்ளோம். உலகிலேயே சில நாடுகள் மட்டுமே குழந்தைகளுக்கான தடுப்பூசியை செலுத்த ஆரம்பித்துள்ளன. இது முக்கியத்துவம் வாய்ந்தது. கொரானா அதிகரித்து வந்த காலத்தில் பெரியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதால் சுற்றி வந்த கொரானா குழந்தைகளை பிடிக்கும் என்ற நிலை இருந்தது.
உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், 2008-2010 வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் மிகப்பெரிய சாதனை செய்த பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மாநில அரசு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள். மக்களிடம் கோரிக்கை வைக்கிறேன். தற்போது கொரானா இல்லையே நான் ஏன் எனக்கும், குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என கேள்வி கேட்கின்றனர். தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் தற்போது கொரானா இல்லை. 85 சதவீதத்திற்கும் அதிகமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் தான் எத்தனை அலை வந்தாலும் சமாளிக்க முடிகிறது. தற்போது சீனாவில் கூட நோய்த்தொற்று பரவி வருகிறது. யாரெல்லாம் தடுப்பூசி போட வேண்டுமோ அவர்கள் எல்லோரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
27-ஆம் தேதி புதுவைக்கு விமான சேவை தொடங்க உள்ளது. ஹைதராபாத்- புதுச்சேரி,பெங்களூர் புதுச்சேரி விமான சேவை தொடங்க உள்ளது முன்னேற்றத்திற்கான மைல்கல். புதுச்சேரியை சேர்ந்த ருத்ரகவுட் என்ற பள்ளி கல்வி இயக்குநர் தனது குழந்தையை அரசுப்பள்ளியில் சேர்த்துள்ளார், பாராட்டை தெரிவித்தேன். அரசுப் பள்ளிகள் தரம் உயர்ந்து எல்லோரும் பள்ளிகளை நோக்கி வர வேண்டும் என்பது என் எண்ணம். புதுச்சேரியில் அரசுப்பள்ளிகள், அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தி எல்லோரும் பயனடைய வேண்டும்.
தமிழகத்தில் பெண்களுக்கான திட்டங்கள் நிறைய செயல்படுத்தப்படுவதை போல புதுச்சேரியில் செய்யப்படுமா என்ற கேள்விக்கு, புதுச்சேரியில் நல்ல பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மகளிர்க்கு, குழந்தைகளுக்கு நல்ல பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு அரசு மாதிரி இன்னொரு அரசு இருக்க முடியாது என பேசினார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - படிப்பதைப் போலவே பெண்கள் வேலைக்குச் செல்வதும் அதிகரிக்க வேண்டும் - நிதியமைச்சர் பி.டி.ஆர் தியாகராஜன்