தமிழகத்தில் தற்போது சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தேனி மாவட்ட செயலாளர் சையதுகான் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 




இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சையது கான் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.  கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில் மாவட்டச் செயலாளர் சையதுகான் பேசுகையில் அதிமுக, அமமுக கட்சிகள் இணைந்தால் தான் அதிமுக மேலும் வலுப்பெறும் எனவும், அடுத்தடுத்த நகர்வுகளில் அதிமுக வெற்றி பெறமுடியும் எனவும் பேசினார். தற்போது அதிமுக மூன்று பெரிய தோல்விகளை சந்தித்து உள்ளதாகவும், எம்ஜிஆர் மறைவுக்குப் பின் கட்சி உடைந்தது. அப்போது பெரும் தோல்வி அடைந்தோம். மறுபடியும் கட்சிகள் இணைந்தால்தான் அதிமுக மீண்டும் வெற்றி பெறும் என பேசினார்.


ஆளுநரை திரும்ப பெறக்கோரி, மக்களவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்!




மேலும் ஜெயலலிதா இறந்த பின் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். பிரிவினை இருந்தால் வெற்றி பெற முடியாது. தலைவர்கள்தான் நல்ல முடிவாக எடுக்க வேண்டும் என்றார். பின்னர் கூட்டத்தில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், மாவட்ட செயலாளர் எழுச்சியான உணர்வுப்பூர்வமான உரையாற்றி உள்ளார். தாலிக்கு தங்கம் , அம்மா கிளினிக் ஆகிய திட்டங்களை அதிமுக அரசு நிறுத்திவிட்டது நீட் தேர்வு ரத்து நாடகம் இன்றும் தொடர்கிறது 10 ஆண்டுகளுக்கு மின் தடை இல்லை இப்போது மின்வெட்டு மீண்டும் அதிகரித்துள்ளது என பேசினார்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர