தேனி மாவட்டம் பெரியகுளத்தில் புகழேந்தி தலைமையில் சேலம், ஈரோடு, சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்ட செயலாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து திடீர் ஆலோசனை மேற்கொண்டனர்.


CM Stalin On ED Raid: ஏவல் அமைப்பான அமலாக்கத்துறை.. பயமுறுத்த பாக்றாங்க, பலிக்காது - பாஜகவை விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்




இந்த ஆலோசனைக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவு கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி ஓபிஎஸ் சந்திப்பு குறித்து கூறுகையில்,  அதிமுகவின் பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமி பொய் பரப்புரை மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் இந்திய தேர்தல் ஆணையத்தில் இன்று வரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பது தான் பதிவேட்டில் இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு கூட்டி  தீர்மானத்தை பதிவேட்டில் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதாகவும், நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பின்பு புதிய பதிவேற்றம் செய்யப்படும் என எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக பொதுச்செயலாளர் என்று ஊடகங்களை ஏமாற்றி வருவதாக தெரிவித்ததோடு, இதனை உறுதிப்படுத்தியதால் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பதிவேட்டில் உள்ளதை கூறி மகிழ்ச்சி தெரிவித்ததாக கூறினார்.


Ponmudi ED Raid: அமலாக்கத்துறை பிடியில் பொன்முடி, கௌதம் சிகாமணி?.. சிக்க வைத்த வழக்கு இதுதானாம்..!




அதனை தொடர்ந்து பேசிய அவர், இனிமேல் எடப்பாடி பழனிசாமி கொடியை பற்றி பேசினால் பொடி பொடியாகி விடுவார், அதிமுக தொண்டர்கள் உண்மை நிலையை தெரிந்து கொண்டார்கள், கொடநாடு கொலை விஷயமாக ஓபிஎஸ் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் தொடரும், என ஓபிஎஸ் அறிவித்ததாகவும், எடப்பாடி பழனிசாமி அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார் என்று கூறியதோடு, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியின் அஜந்தா படி ஊழல்வாதிகளை சேர்க்க மாட்டோம், என கூறும் நீங்கள், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான விஜயபாஸ்கர், வேலுமணி, காமராஜ், தங்கமணி, அன்பழகன், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு திமுகவின் ஊழல் குறித்து அண்ணாமலை பேசுவதற்கு யோக்கியதை இல்லை என தெரிவித்ததோடு அதை பேசுவதற்கு ஓபிஎஸ்க்கும்  மற்றும் அவரது ஆதரவாளர்களான தங்களுக்கு தான் உள்ளது என தெரிவித்தார்.


கோவையில் அரசுப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தந்த முன்னாள் மாணவர்கள்; சீர்வரிசை தந்து அசத்தல்




Aadi Amavasai: ஆடி அமாவாசை: தேனி, திண்டுக்கல் ஆன்மீக ஸ்தலங்களில் குவிந்த மக்கள்


இதனைத் தொடர்ந்து மருது அழகுராஜ் கூறுகையில், கட்சி விதிகளின்படி தேர்வு செய்யப்பட்டவர் முழுமையாக உரிய காலம் வரை இருக்க வாய்ப்பு உள்ளது. இதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தி உள்ளது எனவும், எடப்பாடி பழனிசாமிக்கு இடைக்காலம், நிகழ்காலம், எதிர்காலம் என எதுவும் இல்லை,  ஓபிஎஸ் ஆல் அமைதியான எரிமலை புரட்சி துவங்கி உள்ளதாகவும் மிக விரைவில் வெடிக்கும், எடப்பாடி இல்லாத அண்ணா திமுக கரு கொண்டு உருவாக்கும், அது வரும் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதிக்குள்ளேயே நடந்து விடும் இதனை அடுத்து எடப்பாடி யின் முகத்திரை கிழிந்து விடும் என தெரிவித்தார்.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண