விழுப்புரம் : தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுகிறது என்றும் 10.5 இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டமன்றத்தில் தவறான தகவல் அளித்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சிவசங்கர் மீது பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வருவார்கள் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர் சந்தித்தார். 


”வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் போராட்டம் வெடிக்கும். மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியும் என ஸ்டாலின் கூறுகிறார். இடஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என முடிவெடுத்துவிட்டு காரணத்தை சொல்கிறார்கள். வன்னியர்ளின் வாக்கு வாங்கி ஆட்சிக்கு வந்த திமுகவுக்கு வன்னியர்கள் கல்வி, வேலை வாய்ப்பில் முன்னேறுவது பிடிக்கவில்லை. சமூக படிநிலையில் அடிநிலையில் இருக்க வேண்டும் என திமுக நினைக்கிறது. அதனால் தான் இடஒதுக்கீடு வழங்க மறுக்கிறது. இல்லாத காரங்களை கூறி வன்னியர் இடஒதுக்கீட்டை திமுக அரசு மறுத்தால் பாமகவும், வன்னியர் சங்கமும் ஏற்காது.


மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள வன்னியர் சமுதாயம் முன்னேற இடஒதுக்கீடு முக்கியம் அதனை வென்றெடுக்க எந்த தியாகத்திற்கும் பாமக தயார். இடஒதுக்கீட்டை வழங்க மறுத்தால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம். எப்படிப்பட்ட போராட்டம் என்பதை பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள். வெகு விரைவில் போராட்டம் அறிவிப்பு வெளியிடப்படும்.10.5 சதவீத உள் ஒதுக்கீட்டால் வன்னியர்கள் பாதிக்கப்படுவார்கள் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். இது தவறு, வன்னிய மக்களை ஏமாற்ற பொய்யான தகவலை சட்டப்பேரவையில் கூறியுள்ளார். 


அமைச்சர் சிவசங்கர் அனைத்து உண்மையான தகவலை அறிந்துக்கொண்டு பேசவேண்டும். அரைகுறை தகவலை அளித்து ஏமாற்ற முயன்றுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. சாதிவாரி கணக்கெடுப்பு மாநில அரசே நடத்த வேண்டும். மத்திய அரசு தான் நடத்த முடியும் என ஸ்டாலின் கூறியுள்ளார் அது தவறு. கடந்த 2008 ஆம் ஆனடில் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி மாநில அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியும். பீகார், கர்நாடாகம், ஆந்திரம், தெலுங்கான, ஒடிசா, ஜார்கண்ட் இந்த சட்டத்தை பின்பற்றிதான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. 


பீகார் மாநிலத்தில் இந்த சட்டத்தின்படி எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது செல்லும் என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது இதனை உச்சநீதிமன்றம் உறுத. செய்துள்ளது. பொருந்தாத காரணங்களை சொல்லாமல் சாதிவாரி மக்கள தொகை கணக்கெடுப்பை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டு. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சிவசங்கர் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவரப்படும்


முதல்வர் ஸ்டாலின், சிவசங்கர் சட்டமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளனர். எனவே பாமக உறுப்பினர்கள் இருவர் மீதும் உரிமை மீறல் கொண்டு வருவார்கள். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சம்பவத்தில் முக்கிய புள்ளிகள் சம்பந்தப்பட்டுள்ளனர்.


மேலும் பல மாநிலங்களில் தொடர்பு உள்ளதால் இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும். கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்வாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் நல்ல தீர்ப்பு கிடைக்கும். மது தொடர்பான அனைத்து தீமைக்கும் திமுக தான் காரணம். ஒவ்வொரு ஆண்டும் மதுவால் இரண்டு லட்சம் பேர் உயிரிழப்பு ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் அதிக விபத்துகளும், கைம்பெண்களும் உள்ளனர். பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் அனை கட்ட அனுமதிக்ககூடாது. அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் பாலற்றில் குருக்கே எத்தனை அனை கட்டமுடியுமோ அத்தனை அனை கட்டுவோம் என கூறியுள்ளார். இது இருமாநிலங்களில் பிளவை ஏற்படுத்தும் செயல் ஆந்திரத்தில் அனை கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும்.


சட்டப்பேரவையில் ஜனநாயகம் தழைக்க வேண்டும. சட்டப்பேரவையில் ஜனநாயகத்தின் குரல்வலை நெரிக்கப்படுகிறது. எதிர் கட்சிகள் பேச அனுமதிப்பதில்லை. நூறு நாள் சட்டப்பேரவை நடத்துவோம் என திமுக கூறியது. பேரவை கூட்டத்தை ஆண்டுக்கு நூறு நாட்கள் நடத்த வேண்டும். சட்டப்பேரவை நிகழ்வு நேரலை செய்யப்படும் என் வாக்குறுதி நிறைவேற்றவில்லை. அடுத்த கூட்டத்தொடரை நேரலை செய்ய அனுமதிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.