சேலத்தில் ஓபிஎஸ் தரப்பில் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி, "ஜெயலலிதா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட வாரிசு ஓபிஎஸ் தான். வருங்கால தமிழ்நாடு முதலமைச்சர் வந்துவிட்டார். ஓ பன்னீர்செல்வம் வருகைக்கு பிறகு சேலத்தில் மிகப்பெரிய மாறுதல் ஏற்படும். வெளியே வருவாரா என்று எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கேட்டு வந்தனர் இரண்டு நாட்கள்தான் ஓபிஎஸ் வந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. கோவை சென்ற போது கோவையில் முடங்கி விட்டது .அதைத் தொடர்ந்து சேலம் வந்துவிட்டார். 



எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்வதை தடுப்பு நிறுத்தி இருப்பது திமுக தான். திமுக அமைச்சர் சிறைக்கு செல்லவுள்ளார். மற்றொரு அமைச்சர் சிறைக்கு சென்று 150 நாட்கள் ஆகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பாக ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைய உள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமி சிறைக்கு அனுப்புவோம் என்று சொன்னார். ஆட்சிக்கு வந்தவுடன் திமுக அமைச்சர்கள் தான் சிறைக்கு செல்கிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி செல்லாமல் உள்ளார். தமிழகத்தில் முதலமைச்சர் அரியாசனத்தை கொடுத்தவரிடமே திருப்பி கொடுத்த வரலாறு ஓ பன்னீர்செல்வம் தான் செய்துள்ளார். அதிமுக சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்துவோம். எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு சிறைகளுக்கு அனுப்பாமல் விடமாட்டோம். நீங்களா, நாங்களா என்று பார்த்துக் கொள்வோம். முடிந்தால் உன்னை பாதுகாத்துக் கொள்" என்று பேசினார்.



தொடர்ந்து பேசிய மனோஜ் பாண்டியன், "அதிமுகவில் சாதாரண உறுப்பினர் கூட முதலமைச்சர் ஆகலாம் என்ற சட்ட விதிகளை மாற்றிய எடப்பாடி பழனிசாமி. அரசியல் வாழ்வில் மூடுவிழா நடத்த இந்த கூட்டம் நடைபெறுகிறது" என்றார்.


இவர்களைத் தொடர்ந்து வைத்திலிங்கம் பேசினார். இப்போது அவர் கூறியது, "அதிமுக என்பதை எடப்பாடி பழனிச்சாமி தான் கட்டிக் காப்பது போல் பேசி வருகிறார். 1984 ஆம் ஆண்டு ஜனநாயக கட்சியில் ஏறு உழுதும் சின்னத்திற்கு பழனிச்சாமி கட்சிக்கு சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வேலை செய்தவர் தான் எனக்கு அனுப்ப வேண்டும். வளர்த்து விட்டவர்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் படைத்தவர் தான் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவை அரவணைத்து இவர்கள் சிதறாமல் கொண்டு செல்ல வேண்டும். பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருக்க தகுதி உள்ளதா? என்று கேள்வி அதிமுக கட்சியில் சொந்த கட்சியாக ஆக வேண்டும் என்ற எண்ணம் தான். 99 சதவீதம் தொண்டர்களின் எண்ணம் அதிமுக இணைய வேண்டும் என்று விரும்புகிறார்கள் ஆனால் நீங்கள் அதை செய்யவில்லை, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பன்னீர்செல்வம் சொல்லும் வேட்பாளர்தான் வெற்றி பெறுவார்" என்று கூறினார்.