சேலத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி சேலம் மாநகர ஓபிஎஸ் அணியின் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியது, "எப்போது பார்த்தாலும் நான்தான் பொதுச்செயலாளர் என்று பேசிக்கொண்டு உள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமியின் தந்தையின் சொத்து என்று முத்திரை குத்தி அவரது சொத்து மாதிரி கொண்டு சென்று வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்பதை இணையத்தில் இயற்றப்பட்டுள்ளது. அப்போது அனுப்பியது ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போட்டு அனுப்பப்பட்டுள்ளது. முதலில் இதுதான் சென்றது தற்போது எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் தேர்வு செய்துள்ளதாக கடிதம் அனுப்பி உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு என்ன வருகிறதோ அதேபோன்று தான் எடப்பாடி பழனிசாமி கொடுத்ததை கணக்கில் எடுக்க முடியும் என்று பதில் அளித்துள்ளது. இனிமேல் அதிமுக கொடியின் மீது கை வைக்கக் கூடாது என்று கூறினால் பொடி பொடியாகி விடுவார்கள். இனிமேல் அதிமுக கொடி என்னுடையது என்று தமிழகத்தில் கூறினால் காணாமல் போய்விடுவார்கள் சட்டம் என்னவோ அதை தான் பேச வேண்டும். அதிமுக என்றால் ஓபிஎஸ், ஓபிஎஸ் என்றால் அதிமுக தான். பல நீதிமன்றங்கள் சொல்லட்டும் இறுதி தீர்ப்பு வருகின்ற வரை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தான்.



எடப்பாடி பழனிசாமி தான் ஏற்கனவே இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது தற்போது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டது அண்ணாமலை கூறுகிறார். ஜி-20 மாநாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பதுதான் நியாயம் என்று அண்ணாமலை கூறுகிறார். நீங்கள் யாரை அழைத்தாலும் எங்களுக்கு கவலையில்லை. எடப்பாடி பழனிசாமி இடமிருந்து அண்ணாமலை என்ன பயன் அடைகிறார் என்று தெரியவில்லை. அண்ணன் பழனிசாமி என்று கூறுகிறார் இது வேதனையாக உள்ளது. அதிமுக எடப்பாடி பழனிசாமி என்று கூற வேண்டாம் என்று ஊடகங்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.


எம்ஜிஆர் கொடுத்த கொடி இது யாருக்கும் சொந்தமான கொடி அல்ல அனைவரும் கொடியை பிடிக்கட்டும் பிடிக்கக் கூடாது என்று கூறுவது சர்வாதிகாரத்தனம். ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் பெயர் உள்ளது. இதில் எந்த கண்டிஷன் விதியை எதுவும் போடவில்லை. தேர்தல் ஆணைய நிபந்தனையுடன் பொதுச் செயலாளர் என்று எடப்பாடி பழனிசாமி போட வேண்டும். தமிழகத்தில் வருவாய் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கோடநாடு கொலை வழக்கு விரைந்து விசாரிக்கப்பட்டு தமிழக முதல்வர் சொன்னபடி உண்மை நிலை கண்டறியப்பட்டு யார் குற்றவாளி என்பதை கண்டறிய வேண்டும் என்று போராட்ட களத்தில் இறங்க உள்ளோம். அதிமுக கொடியுடன் போராட்டத்தில் இறங்க உள்ளோம். அதிமுக குறித்த ஒரு முடிவு எட்டப்படாத நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்துக் கொண்டு போலியான அடையாள அட்டை அச்சடித்துள்ளனர். போலியாக அடையாள அட்டை வழங்குவார்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளேன். 2018 ஆம் ஆண்டு தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் இரண்டும் இடம் பெற்றுள்ளது. அங்கு இணை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் இங்கு எப்படி பொதுச்செயலாளராக மாறுவார் என்று கேள்வி எழுந்துள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இதனை கொண்டாட வேண்டும் இனி அதிமுக கட்சி ஓபிஎஸ் தலைமையிலான அணி உடையது வெளியே வாருங்கள் வீரநடை போடுவோம் மீண்டும் போராடி தமிழகத்தில் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக ஆட்சியை நிறுவுவோம்.



பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமி தான் அழைக்கிறார் என்று கூறுகிறார். அந்த மாநாட்டில் கலந்து கொண்டால் நாளை காலை ஆட்சிக்கு வந்து விட முடியுமா என்று கேள்வி எழுப்பினார். ஓபிஎஸ் பிரதமர் மீது நல்ல மரியாதையை வைத்திருந்தார் . இதை அண்ணாமலை கெடுக்க பார்க்கிறார்.‌ எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, காமராஜ் உள்ளிட்ட ஊழல்வாதிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை. எடப்பாடி பழனிசாமி எங்கள் அண்ணன் என்று அண்ணாமலை கூறுகிறார், பழனிசாமி எல்லா குற்றங்களிலும் மாற்றிக்கொண்டு நிற்கிறார். ஒன்னும் இல்லாதவர்கள் சம்பாதிக்காதவர்கள் தியாகம் செய்தவர்கள் தான் ஓபிஎஸ் பக்கம் நிற்கிறார்கள். கொள்ளையடித்தவர்கள், கொலை செய்தவன் அனைவரும் தான் எடப்பாடி பழனிசாமி பக்கம் நிற்கிறார்கள். அதிமுக வழியில் ஆதரவு கொடுக்கும் ஒரு மனிதன் வாக்கு சீட்டை கையில் எடுத்து ஓபிஎஸ், இபிஎஸ் என்று முடிவு செய்தால் 95 சதவீதம் நபர்கள் ஓபிஎஸ் தான் என்று வாக்களிப்பார்கள் என்று கூறினார். 


பணமழையாக பெய்த ஈரோடு இடைத்தேர்தலில் பத்தாயிரம் வாக்குகளை சீமான் பெறுகிறார் என்றால் கட்டாயம் பாராட்டியே தான் ஆக வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலில் சீமான் பணம் கொடுக்கவில்லை என்பதை நம் ஒத்துக் கொண்டே தான் ஆக வேண்டும். தேர்தல் என்று வரும்போது அப்பொழுது தான் தெரியும் ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி என்பது தெரியவரும் தெளிவு பெறும் அதுவரை இப்படித்தான் சென்று கொண்டிருக்கும். சசிகலா, ஒபிஎஸ் உள்ளிட்டவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டியது குறித்து ஒரு பட்டியலே உள்ளது. தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமி தணிக்க கட்சி ஆரம்பிக்க தயாராக உள்ளார்” என கூறியுள்ளார்.


இந்த செய்தியாளர் சந்திப்பின் போது பெங்களூர் புகழேந்தி உட்பட மேடையில் இருந்து அனைவரும் தங்களது காதுகளில் இரு பக்கமும் பூவை வைத்திருந்தனர்.