எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு டிடிவி தினகரன் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்,


பழனிசாமி, பன்னீர்செல்வம் இடையே பதவி சண்டையால் இன்று நீதிமன்றத்தில் அந்த கட்சி யாருக்கு சொந்தம் என்பது வழக்காக உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில், எம்ஜிஆரால் தீய சக்தி என்கின்ற அடையாளம் காட்டப்பட்ட திமுகவை வீழ்த்துவது குறிக்கோள். திமுக ஆட்சி பொறுப்பேற்று 20 மாதங்களில் தேர்தல் வாக்குறுதிகள் சொன்னதை கூட நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது, இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர அம்மாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒரு அணில் திரண்டு திமுகவை வீழ்த்தி காட்டுவோம்.


வருகின்ற பாராளுமன்ற தேர்தலையொட்டி கட்சியை பலப்படுத்தவும் பூத் கமிட்டி அமைப்பதற்காகவும் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியாக சென்று அமைப்பை பலப்படுத்த வேண்டும் என்ற பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் கூட்டணி பற்றிய முடிவு அமமுக விரைவில் அறிவிக்கும். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும் வேண்டும் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். அதுதான் எங்களுடைய கருத்தும் கூட.


ஜனநாயக ரீதியாக மக்கள் ஆதரவை பெற்று, தேர்தலில் வெற்றி பெற்று அம்மாவின் உண்மையான தொண்டர்கள் உள்ள இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் என்பதை நிரூபிப்போம். தமிழ்நாடு ஆளுநர் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார். இது வேலியே பயிரை மேய்வது போல இருக்கிறது. எனவே மத்திய அரசு அவரை திரும்ப பெற வேண்டும். தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்ல வேண்டும் என ஆளுநர் தேவையில்லாமல் அரசியல் பேசுகிறார். தமிழ்நாடு மக்கள் அனைவரும் வருத்தப்படும் விதத்தில் அவர் பேசுகிறார். மத்திய அரசுக்கு தமிழகத்தில் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதால் அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதே அமமுகவின் கோரிக்கை என்று கூறினார்.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.