தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்றது. கடந்த இரு தினங்களாக வேட்பு மனு பரிசீலனை நடை பெற்ற நிலையில், இன்று மாலை தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கு 7 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்த நிலையில், 4515 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
இதே போல் புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கு 486 பேர் மனுத்தாக்கல் செய்த நிலையில் 81 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு வாபஸ் பெற இன்று மாலை 3 மணி வரை அவகாசம் தரப்பட்டுள்ள நிலையில் அதன் பின்பாக இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு ஏற்கனவே சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சுயேட்சைகளுக்கு இன்று மாலை சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இதே போல் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட 23 வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்த நிலையில் அதில் 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன, வாபஸ் பரிசீலனைகளுக்கு பின் எஞ்சியுள்ள வேட்பாளர்களின் முழு விபரம் இன்று மதியம் 3 மணிக்கு பின் முறைப்படி அறிவிக்கப்பட உள்ளது