திருவண்ணாமலை ஒருங்கிணைந்த தெற்கு மற்றும் வடக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பாஜக அரசை கண்டித்து திருவண்ணாமலை, அண்ணாசாலையின் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்று நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை புறக்கணித்த மத்திய பாஜக அரசு கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய தமிழக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி
மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு எந்த ஒரு திட்டத்தையும் கொடுக்காமல் தமிழகத்தை மட்டுமல்ல பல மாநிலங்களையும் பாஜக புறக்கணித்துள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்து கொள்ளவில்லை, இதே போன்று எதிர்க்கட்சியாக உள்ள அனைத்து மாநில முதல்வரும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, மத்திய அரசு ஒவ்வொரு முறையும் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக அல்வா கிண்டுவார்கள். அந்த வகையில் இந்த பட்ஜெட்டில் தமிழகத்துக்கு அல்வா கொடுக்க தான் அல்வாவை கிண்டி உள்ளார்கள் எனவும், தமிழகத்துக்கு நிதிநிலை அறிக்கையில் தேவைப்படும் நிதிகளை வழங்காமல் வஞ்சித்துள்ளதாகவும், மத்திய அரசின் படத்தை தமிழகம் கேட்கவில்லை என்றும், தமிழக அரசு மூலமாக மத்திய அரசுக்கு அளிக்கும் வரி பணத்தை தான் நாம் கேட்கின்றோம் என்றும், ஒவ்வொரு மாதமும் மத்திய அரசுக்கு தமிழகம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி வரி செலுத்தி வருவதாகவும், அந்த வகையில் தமிழகத்திற்கு மத்திய அரசு தேவைப்படும் நிதிகளை அளிக்காமல் புறக்கணிப்பதாகவும் தமிழக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி உரையாற்றினார்.