Telengana CM : பெரும் பரபரப்பு..! தேசிய கட்சியை விரைவில் தொடங்குகிறார் சந்திரசேகர் ராவ்..!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ் விரைவில் தேசிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

தெலுங்கானா மாநில முதல்வர் கே.சி. சந்திரசேகர்ராவ். தென்னிந்தியாவின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக திகழும் இவர் சமீபகாலமாக பா.ஜ.க.வையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், முதல்வர் சந்திரசேகர் ராவ் விரைவில் தேசிய கட்சியை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். தற்போது அவர் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

இதுதொடர்பாக சந்திரசேகர்ராவ் அலுவலகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “ தெலுங்கானா இயக்கம் தொடங்குவதற்கு முன்பு நாங்கள் செய்ததைப் போன்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிவுஜீவிகள், பொருளாதார வல்லுனர்கள் மற்றும் நிபுணர்களுடன் நீண்ட நேர ஆலோசனைக்கு பிறகு மாற்று தேசிய நிகழ்ச்சி நிரலில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. இதனால், மிக விரைவில் தேசிய கட்சியை உருவாக்குவதும், அதன் கொள்கைகளை உருவாக்குவதும் நடைபெறும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சந்திரசேகர் ராவின் இந்த அறிவிப்பால் தேசிய அரசியலில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா உருவாவதற்கு மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்து, பின்னர் அந்த மாநிலத்தின் முதல்வராகவும் பொறுப்பு வகித்து வரும் சந்திரசேகர் ராவ் தென்னிந்தியாவில் பிரதமர் மோடியை மிகவும் வலுவாக எதிர்த்து வரும் தலைவர்களில் ஒருவர் ஆவார்.

தெலுங்கானா மாநிலத்தில் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த பிறகு தேசிய அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் சந்திரசேகர் ராவ். 2019 தேர்தலுக்கு முன்பே அவர் மம்தா பானர்ஜி, தேவகவுடா, அகிலேஷ் யாதவ், ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக், ஸ்டாலின் ஆகியோர சந்தித்தார். ஆனால், அப்போது அவரால் தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே பிரதமர் மோடியையும், பா.ஜ.க.வையும் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். தெலுங்கானாவிற்கு பிரதமர் மோடியை சந்தித்தபோது அவரைச் சந்திப்பதையும் தவிர்த்தார். எம்.எல்.ஏ, மாநில அமைச்சர், மத்திய அமைச்சர், முதல்வர் என பல்வேறு பொறுப்புகளை வகித்த கே.சி.சந்திரசேகர்ராவ் தற்போது தேசிய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.


தேசிய கட்சி அந்தஸ்தை பெற வேண்டும் என்றால் நான்கும் மேற்பட்ட மாநிலங்களில் சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்களில் குறைந்தது 6 சதவீதம் வாக்குகளைப் பெற வேண்டும். இதனால், சந்திரசேகர் ராவ் எதிர்வரும் குஜராத், கர்நாடகா, மகாராஷ்ட்ரா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் உத்தரபிரதேச தேர்தல்களில் கவனத்தை செலுத்த உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சந்திரசேகர் ராவ் புதிய தேசிய கட்சியை தொடங்க இருப்பதாக கூறியிருப்பது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola