தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் காவல்துறை மீதான மானியக்கோரிக்கையில் இன்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். 

இதையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய சொந்த எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

காவல்துறைக்கான அறிவிப்புகள்:

தொழிற்துறையினர் தமிழ்நாட்டை நாடி வரவும் - சீரான வளர்ச்சியில் நாம் நடைபோடவும், சட்டம் - ஒழுங்கையும், பொது அமைதியையும் பாதுகாக்கும் என்னுடைய துறையான காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில்,

சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து பல இடங்களில் புதிய காவல் நிலையங்கள், காவல் நிலையக் கட்டடங்கள், தீயணைப்பு நிலையங்கள் - வாகனங்கள்

ஆண்டுதோறும் செப்டம்பர் 6-ஆம் நாள், காவலர் நாள் ஆதிக்கத்தின் - தீண்டாமையின் அடையாளமாக இருக்கும் சொல்லை அரசு ஆவணங்களில் இருந்தும், பொதுப் புழக்கத்திலிருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டேன்.

திராவிட மாடல் 2.0 ஆட்சி:

ஊர்ந்து கிடக்க அடிமைகள் அல்ல நாம்; நெஞ்சுநிமிர்த்தி நடைபோட்டு 2026-இல் திராவிட மாடல் 2.0 ஆட்சியமைக்கப் பயணத்தைத் தொடர்வோம்! வரலாறு படைப்போம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

சட்டமன்ற தேர்தல்:

அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது முதலே வாக்காளர்களை கவர ஆளுங்கட்சி பல்வேறு நலத்திட்டங்களை சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தமிழக சட்டமன்றத்தில் நேற்று அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, திருமணம், கல்வி உதவித்தொகைக்கான முன்பண உயர்வு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 

இந்த நிலையில், இன்று காவல்துறை மானியக்கோரிக்கையில் காவலர்களுக்கு பல அறிவிப்புகளை அந்த துறையை தன்வசம் வைத்துள்ள மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அடுத்தடுத்த நாட்களில் அரசு மற்றும் காவல்துறையினருக்கு அறிவிப்புகளை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் 2.0 ஆட்சியைமப்போம் என்று பதிவிட்டுள்ளார். 

தமிழ்நாட்டில் அஅடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தலாக இந்தியா முழுவதும் கண்காணிக்கப்படுகிறது. ஏனென்றால், இந்த முறை ஆளுங்கட்சியான திமுக, ஏற்கனவே ஆட்சி செய்த அதிமுக-வுடன் அறிமுக கட்சியாக களமிறங்கியுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் கடும் சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.