விழுப்புரம்: தமிழக அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது அனைத்து தரப்பினரும் வரவேற்கும் வகையில் உள்ளது. டாஸ்மாக்கில் ஊழல் முறைகேடு நடந்திருந்தால் சட்டபூர்வமாக தமிழக அரசு எதிர்கொள்ளும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 


விழுப்புரம் நகராட்சி திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் அங்கீகார விழா வருகின்ற 16 ஆம் தேதி நடைபெறுவதால் மேடை அமைக்கும் பணியினை விசிக தலைவர் திருமாவளவன் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசியலில் அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகள் ஆகின்றன. மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது. அங்கீகாரத்தை வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வெற்றி விழா விழுப்புரத்திலும் சிதம்பரத்திலும் நடைபெறுவதாக தெரிவித்தார். தமிழக அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது அனைத்து தரப்பினரும் வரவேற்கும் வகையில் உள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் பெண்களை தொழில் முனைவோர்களாக மேம்படுத்துவதன் அடிப்படையில் 20 விழுக்காடு மானியத்துடன் 10 லட்சம் புதிய கடன் திட்டத்தினை அறிவித்துள்ளது வரவேற்கதக்கது என தெரிவித்தார்.


வீட்டுமனை இல்லாதவர்களுக்கு 5 லட்சம் பேருக்கு பட்டா வழங்க இலக்கை நிர்ணயித்து பட்ட வழங்குவதற்கான செயல்திட்டத்தில் இறங்கி உள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் அண்ணல் அம்பேத்கர் தொழில்முனைவோர் திட்டத்திற்கு 70 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது பாராட்டுதலுக்குரியது. கடலூர் விழுப்புரம் மாவட்டத்தில் தொழில்பூங்கா அமைக்கப்படுமென்ற அறிவிப்பு பின் தங்கிய மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்பதால் தமிழக அரசுக்கு நன்றி என கூறினார்.


விசிகவின் கோரிக்கை ஏற்று செய்யூர் தொகுதியில் 800 ஏக்கர் சிப்காட் அமைக்கப்படுமென அறிவித்தற்கும், செய்யூரில் கலை அறிவியல் கல்லூரிக்கு புதிய கல்லூரி அறிவிப்பு வெளியிட்டதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். பட்ஜெட்டில் பதவி உயர்விற்கான சட்டம் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்தோம், சிறப்பு கூறுகள் திட்டத்திற்கான செயல்திட்டங்களை அறிவிக்க வேண்டும் அதற்கான சட்டம் ஏற்கனவே வந்துவிட்டது. அதன்படி எஸ்சி, எஸ்டி மக்களுக்கு அச்சட்டத்தின்படி எந்த நிதியும் ஒதுக்காதது ஏமாற்றமளிக்கிறது என்பதால் மானியக்கோரிக்கையில் அறிவிப்பு வெளியாகும் என நம்புவதாக தெரிவித்தார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கர்ப்பவாய் புற்றுநோய் தடுக்க விசிக வலியுறுத்தியதின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்க தக்கது ஆறுதல் அளிப்பதாகவும், டாஸ்மாக்கில் ஊழல் முறைகேடு நடந்திருந்தால் சட்டபூர்வமாக அமலாக்க துறை எதிர்கொள்ளும் அதனை தமிழக அரசு அல்லது உள்துறை எதிர்கொள்ளும் எந்த அளவிற்கு ஆதாரபூர்வமாக தரவுகள் கிடைத்துள்ளது என்பது தெரியாது அறிக்கை மட்டுமே வெளியாகியுள்ளது அறிக்கையை வைத்து மட்டுமே கருத்து சொல்ல இயலாது.


நாங்குனேரி சின்னதுரை தாக்கப்பட்ட போது நீதிபதி சந்துரு தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விரிவாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில் மிக்க முக்கியமாக பள்ளி மாணவர்களிடையே சாதி உணர்வை தூண்டும் வகையில் சாதிய அமைப்புகள் அதற்கு இடமளிக்க கூடாது தூண்டுதலில் ஈடுபட கூடாது என அறிவிப்புகளை தந்துள்ளார். பள்ளி மாணவர்கள் கைகளிலையே சாதிய அடையாளங்கள் இருக்க கூடாது சைக்கிள்கள், வகுபறைகள் கழிப்பறைகளில் சாதிய அடையாளங்கள் இருக்க கூடாது என அறிவுறுத்தலை தந்திருக்கிறார்.


பிஞ்சு உள்ளங்களில் சாதிய நஞ்சு பரப்புகிற வேலையில் தொடர்ந்து ஈடுபடுவது கவலைக்குறியது. தென்மாவட்டங்களில் நான்குனேரி சின்னதுரை மட்டுமல்ல அதுபோல பல தலித் இளைஞர்கள் தாக்கப்படுவதற்கு காரணம் சாதிய அமைப்புகள் தான் காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஸ்ரீ வைகுண்டத்தில் தேவேந்திர ராஜா என்ற பதினோராம் வகுப்பு பள்ளி மாணவன் பாதிக்கப்பட்டுள்ளார். வன்கொடுமைகள் அதிகரிக்க காரணம் எது என்பதை அறிய வேண்டும் கண்டறியவும் தடுப்பதற்கு ஏதுவாக புலனாய்வு தனிப்பிரிவி நுண்ணறிவு பிரிவு உருவாக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் பட்ஜெட் கூட்டத்தொடரில் அதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும் 


நீளமான பட்ஜெட் தந்தாலும் சுருக்கமான பட்ஜெட் தந்தாலும் அரசியல் செய்கிறவர்கள் குறை சொல்லவேண்டுமென சொல்வார்கள் என தமிழிசைக்கு பதிலளித்தார். ரூபாயின் மதிப்பு ரூ என்ற வடிவத்தில் குறிப்பிடுவது வழக்கமான ஒன்று அது எளிதாக புரியும் நீண்ட காலமாக கடைப்பிடித்து வருகிறது இது குறித்து அரசு தான் விளக்க வேண்டும்.


கல்வி கடன்களை ரத்து செய்வது ஒன்றிய அரசு தான் செய்யவேண்டும் அதனை ஒன்றிய அரசிற்கு பொறுப்பு இருக்கிறது. பொதுக்கூட்டங்கள் நடத்தும் கட்சிகளே பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான தொகையை வழங்க வேண்டுமென உயர்நீதிமன்ற நீதிபதி கூறிய கருத்து நல்ல கருத்து வரவேற்கத்தக்கது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.