தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளிநாடு சென்றுள்ள நிலையில், கட்சி பணிகளை ஒருங்கிணைக்க பாஜக மூத்த தலைவர் H. ராஜா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.


அண்ணாமலை வெளிநாட்டு பயணம்: 


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டனுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவர் அங்கு மூன்று மாதம் தங்கியிருப்பார் என்றும் அங்கிருந்தே கட்சி பணிகளையும் கவனித்துக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது. தன்னுடைய பட்டய படிப்பிற்காகவே பாஜக தலைமையின் அனுமதி பெற்று அண்ணாமலை லண்டன் சென்றுள்ளதாகவும் அதற்கு வேறு காரணங்கள் எதுவும் இல்லை என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 


ஒருங்கிணைப்பு குழு:


இந்நிலையில், தமிழ்நாட்டில் பாஜக கட்சியின் செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில் குழுவானது அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பாஜக தேசிய செயலாளர் அருண்சிங் வெளியிட்டுள்ளார். 






அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராக ஆனபின்னர் அவரின் அதிரடி நடவடிக்கைகள் பேச்சுகளால் அனுதினமும் அரசியல் களத்தை பரபரப்பாக வைத்துக்கொண்டிருந்தார். ஆனால், அவர் லண்டன் புறப்பட்டு சென்ற பிறகு இந்த மூன்று மாதங்களில் அதிமுக – பாஜக, திமுக – பாஜகவினர் இடையே அண்ணாமலை ஏற்படுத்திய தாக்கமும், அந்த வீரியமும் குறையவேத் தொடங்கும். அதனால், பரபரப்பு செய்திகளுக்கும் – காரசார வார்த்தை மோதல்களுக்கும் இந்த நாட்களில் ஒரு இடைவேளை ஏற்படக்கூடும் என கருத்துக்கள் எழுந்தது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் H. ராஜா ஒருங்கிணைப்பாளராக அமைக்கப்பட்டுள்ளது, அவ்விடத்தை நிரப்புமா அல்லது அதைவிட அனல் பறக்குமா இல்லை சாந்த போக்கை எடுக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.