தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை ஆலயங்களில் தினசரி மதிய வேளையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தின்படி, தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது. அங்கு பழங்குடியினத்தவர்களை மற்றவர்களுடன் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கவில்லை என்று பழங்குடியின பெண் அஸ்வினி வேதனையுடன் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது.




இந்த நிலையில், அஸ்வினி வசிக்கும் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி நரிக்குறவர் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அங்கு வசிக்கும் 81 இருளர் சமுதாய மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கியதுடன், சமூக வலைதளங்களில் வைரலான அஸ்வினியின் வீட்டிற்கு நேரில் சென்று அந்த பெண்ணிடம் வீட்டுமனை பட்டாவை வழங்கினார். முதல்வரின் இந்த செயலை அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.










 


இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த செயலை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக, அவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,


“ சகோதரி அஸ்வினி இல்லத்திற்கு முதலமைச்சர் சென்று வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அநீதி யாருக்கும் நடக்கக்கூடாது என்பது பா.ஜ.க.வின் நிலைப்பாடு. மத்திய அரசினுடைய முத்ராகடன் திட்டத்தையும், சுவாநிதி திட்டத்தையும் அஸ்வினிக்கு அறிமுகப்படுத்தியதற்காக முதலமைச்சருக்கு நன்றி.




பிரதமர் மோடியின் அனைத்த திட்டங்களும் சகோதரி அஸ்வினி போன்றவர்களுக்குதான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தமிழக முதல்வர் அனைத்து மத்திய அரசு திட்டங்களையும் மக்களுக்கு இதேபோல், நேரடியாக எடுத்துச்செல்வார் என்று நம்புகின்றோம்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண