தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார். அவர் சென்னையில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு டெல்லி திரும்பும் முன் விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சில பா.ஜ.க. நிர்வாகிகளை பிரதமருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.


அவர்களுக்கு விரைவில் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு சந்தித்தவர்களில் தற்போது பா.ஜ.க.வின் மாநில செயலாளராக பொறுப்பு வகிக்கும் எஸ்.ஜி. சூர்யாவையும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிமுகப்படுத்தி வைத்தார். கடந்த மாதம் பொறுப்பு பா.ஜ.க.வின் மாநில செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்ட இவருக்கு மீண்டும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


எஸ்.ஜி. சூர்யா கோவையில் பிறந்து, புனேவில் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தவர். இளம் வயது முதலே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்து வரும் இவர் 2012ம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி பொறுப்பேற்பதற்காக பணியாற்றிய தகவல்தொழில்நுட்ப குழுவில் இடம்பெற்றிருந்தார்.  2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்காக சிறப்பு தகவல் தொழில்நுட்ப குழுவில் பணியாற்றிவர். 2016ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக பா.ஜ.க.விற்காக அவர் பணியாற்றினார்.




நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், தமிழக பா.ஜ.க.விலும் சில முக்கிய மாற்றங்களை செய்ய கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கட்சியில் பல்வேறு மாற்றங்களை செய்ய பா.ஜ.க. ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி நிகழ்ச்சிகளை முடித்த பிறகு அ.தி.மு.க. தலைவர்கள், ஆதினம் உள்ளிட்ட சிலரையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண