Mari Selvaraj: கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்லத்தான் வந்தேன் என்று மாரி செல்வராஜ் உருக்கமாக பேசியுள்ளார்.

Continues below advertisement

 

கல்வியில் சிறந்த தமிழ்நாடு:

தமிழ்நாடு அரசின் ஏழு திட்டங்களின் சாதனைகளை விளக்கும் வகையில்,’கல்வியில் சிறந்த தமிழ்நாடு’என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்  நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி,  சிறப்பு விருந்தினராக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் நடிகர்கள் சிவக்குமார், சிவகார்த்திகேயன், இயக்குனர்கள் மிஸ்கின், பிரேம்குமார், மாரி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த  நிகழ்ச்சியில் முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்லத்தான் வந்தேன் என்று மாரி செல்வராஜ் உருக்கமாக பேசியுள்ளார்.

Continues below advertisement

நெகிழ்ச்சியாக பேசிய மாரி:

”நான் முதலில் பசிக்காக தான் திருடினேன். நான் முதலில் திருடியது வாழைப்பழம் தான். தினமும் அப்பா, அம்மா நான் காலையில் எழுவதற்கு முன்னார் வேலைக்கு சென்று விடுவார்கள்.  அதனால் நாங்கள் வாழைத்தோட்டத்திற்கு சென்று வாழைப்பழங்களை திருடுவோம். ஆனால், இதையெல்லாம் மாற்றும் முனைப்பாக இருப்பது காலை உணவுத்திட்டம்.

இந்த திட்டத்திற்காக எவ்வளவு நன்றி வேண்டுமானாலும் சொல்லலாம். இந்த திட்டத்தை கொண்டு வந்ததற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் பள்ளிக்கல்வித்துறை குறித்து பேசினார். “சாதிப்பெயரை பள்ளிகளில் இருந்து அகற்றி பள்ளியில் நடக்கும் சாதிய மோதலை தடத்து அறிவுயுத்தமாக மாற்றியது கல்வித்துறை தான்”என்றார்.