தஞ்சையில் நடந்த கங்கை கொண்ட சோழபுரம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வந்தார். அப்பேோது பிரதமரை சந்திப்பதற்காக ஓபிஎஸ் நேரம் கேட்டு கடிதம் எழுதியிருந்தார். எட்பபாடி பழனிசாமியை சந்தித்து பேசிய மோடி, ஓபிஎஸ்-யை சந்திக்காமல் சென்றது தமிழக அரசியலில் பேசுபொருளானது. பிரதமர் மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதையும் தெளிவாக கூறிவிட்டார்.
இந்த அறிவிப்புக்கு பின்னர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக கூட்டணியில் ஓபிஎஸ் அங்கம் வகிக்க இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தன்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரை சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருப்பேன் என தெரிவித்தார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக ஓபிஎஸ் அறிவிப்பை ஒன்று வெளியிட்டார். பலமுறை நயினார் நாகேந்திரனுக்கு போன் செய்து பார்த்தேன். அவர் என் அழைப்பை எடுக்கவில்லை என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு நயினார் நாகேந்திரனுக்கும் - ஓபிஎஸ்க்கும் பனிப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை செளந்தரராஜன், நயினாருக்கும், ஓபிஎஸ்க்கும் கருத்து மோதல் இருப்பது உண்மை. நயினார் நாகேந்திரனை குற்றம் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஓபிஎஸ் இன்னும் நிதானமாக அரசியல் நகர்வுகளை செய்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.