மக்களவை தேர்தல்:
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இறுதி கட்டமாக 7-வது கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தலைமை செயலர் ஆலோசனை:
இந்நிலையில் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா இன்று (மே 31) ஆலோசனை செய்தார். இதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டிருக்கிறது.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் டிஜிபி சங்கர் ஜிவால் சட்டம் ஒழுங்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும் படிக்க: Exit Polls 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்றால் என்ன? எப்படி நடக்கிறது? முழு விவரம்
மேலும் படிக்க: ABP CVoter Exit Polls: மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு.. நேரலையில் பார்ப்பது எப்படி?