தமிழ்நாடு அரசியல் களம் எப்போதுமே ஒவ்வொரு தேர்தலுக்கும் மாறுதலுக்கு உட்பட்டதாக இருந்து வருகிறது. குறிப்பாக கூட்டணி அரசியலைப் பொறுத்தவரை தேர்தலுக்கு தேர்தல், மாற்றம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அரிதாக ஒரு சில தேர்தல்களில் மட்டுமே, ஒரே கூட்டணி தொடர்ந்து வருகிறது.‌ சமீபத்திய தேர்தல் முடிவுகள் எடுத்துக் கொண்டோம் என்றால், திமுக தமிழ்நாடு தேர்தல் களத்தில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து, திமுக ஒரே கூட்டணியில் பயணிப்பது தான் காரணம் என அரசியல் நோக்கங்கள் கூறுகின்றன. 


2019 நாடாளுமன்ற தேர்தல்


அதேபோன்று 2019 அதிமுக மெகா கூட்டணியை உருவாக்கியது. இந்த கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய முக்கிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. 2019 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்திருந்தாலும், அப்போது நடந்த இடைத்தேர்தலில் தேவையான இடங்களை வென்று அதிமுக தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதன்பிறகு நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் போது, அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக மட்டும் வெளியேறியது. ஆனால் திமுக கூட்டணி அப்படியே தொடர்ந்ததால் மீண்டும் திமுக வெற்றி பெற்றது. 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சியைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக கூட்டணியும் படுதோல்வி சந்திக்காமல் கௌரவமான தோல்வியை சந்தித்திருந்தது.


படுதோல்வி சந்தித்த கூட்டணிகள் 


நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி நிலவரம் தலைகீழாக மாறியது. அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் எனக் கூறியதை தொடர்ந்து, கூட்டணி முறிந்தது. இதனைத் தொடர்ந்து அதிமுக- தேமுதிக இணைந்து தேர்தலை சந்தித்தனர். மாறாக பாஜக, பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், உள்ளிட்ட சில கட்சிகள் சேர்ந்து தேர்தலை சந்தித்தனர். அப்போது அதிமுக- பாஜக- பாமக- தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவாக்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.


வியூகம் வகுக்கும் ஜி.கே.வாசன்


திமுகவை விழுத்த வேண்டுமென்றால் திமுகவிற்கு எதிராக இருக்கும் அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் திரள வேண்டும் என்பதே அவரது கருத்தாக இருந்தது. நேரடியாக பிரதமரிடம் சந்தித்து ஜி.கே.வாசன் தனது யோசனைகளை முன்வைத்து அதற்கான பணிகளை தொடங்கினார். அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்பாததால் இறுதியில் அந்த கூட்டணி தோல்வியிலேயே முடிந்தது. தேர்தல் முடிவுகளும் இரண்டு கூட்டணிகளுக்கும் படு தோல்வியை கொடுத்தது. 


இந்தநிலையில் வருகின்ற 2021 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக திமுகவின் வீழ்த்துவதற்கான சரியான யூகத்தை அமைக்க இப்போதே பணிகளை ஜி.கே.வாசன் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக டெல்லி சென்று பிரதமர், அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளாராம். 


திமுகவை விழ்த்த திட்டம் என்ன ?


திமுக கூட்டணி வலுவாக இருப்பதால் தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டால் வீழ்த்துவது கடினம். எனவே பிரம்மாண்ட கூட்டணி அமைத்து திமுகவிற்கு எதிராக இருக்கும் அனைத்து, எதிர்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதை அவரது எண்ணமாக உள்ளது. இது மட்டுமில்லாமல் 2026 ஆண்டு அமைய இருக்கும் ஆட்சி கூட்டணி ஆட்சியாக இருக்க வேண்டும் என ஜி.கே.வாசன் விரும்புகிறாராம். இதற்கு முக்கியம் பிரம்மாண்ட கூட்டணி அமைய வேண்டும் என்பது அவரது எண்ணமாக உள்ளது. 


தற்போது கட்சி தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் ஆகியவற்ற இணைந்து இந்த கூட்டணி இருக்க வேண்டும் என்பதும் அவரது ஆசையாக உள்ளது என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜி.கே.வாசன் பாஜகவின் ஒப்புதலுடன் திமுகவிற்கு எதிராக உள்ள எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளாராம். திமுகவைவிழுந்த வேண்டுமென்றால் அதிமுக- பாஜக- பாமக - தவெக - தேமுதிக - தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தால் நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கலாம் என்பது வியூகமாக உள்ளது. இதற்காக தலைவர்களை தனித்தனியாக சந்திக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தலுக்கு இன்னும் கிட்டத்தட்ட 17 மாதங்கள் வரை உள்ள நிலையில் இப்போதே தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.